ஆஸ்திரேலிய துணை பிரதமர் ராஜினாமா

ராஜினாமா செய்த பார்னபி ஜாய்ஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ராஜினாமா செய்த பார்னபி ஜாய்ஸ்

முன்னாள் ஊழியருடன் தொடர்பு வைத்திருந்த விவகாரத்தில், அரசியல் நெருக்கடிக்கு ஆளான பார்னபி ஜாய்ஸ், ஆஸ்திரேலியாவின் துணை பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

தேசிய கட்சியின் தலைவர் பதவியில் இருந்தும் வரும் திங்கட்கிழமையன்று விலக உள்ளதாக அவர் தெரிவித்தார்.

அமைச்சரின் நடத்தை விதிகளை துணைப் பிரதமர் ஜாய்ஸ் மீறினாரா என எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

"தற்போது ஏற்பட்டுள்ள சலசலப்பை ஒதுக்கி வைக்க வேண்டும்" என செய்தியாளர்களிடம் ஜாய்ஸ் தெரிவித்தார்.

இரண்டு வாரங்களுக்கு மேலாக இந்த விவகாரம் ஆஸ்திரேலிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டு இருந்தது.

இதுகுறித்து கடந்த வாரம் விமர்சித்த ஆஸ்திரேலிய பிரதமர் மல்காம் டர்ன்புல், "ஊழியர்களுடன் உடலுறவு வைத்துக் கொள்ள அமைச்சர்களுக்கு தடை விதிக்கப்படும்" என தெரிவித்திருந்தார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :