You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஒரு லட்சம் டாலர் பணத்தை விழுங்கியதா இந்த பாம்பு?
நைஜீரியாவில் ஒரு லட்சம் டாலர்களுக்கு சமமான பணத்தை பாம்பு விழுங்கிவிட்டதாக தணிக்கைக் குழுவிடம் கூறுகிறார் ஊழியர் ஒருவர்.
நைஜீரியாவில் பெரிய தொகை காணாமல் போனதை பற்றி ஓர் அசாதாரண விளக்கத்தை கூறிய பள்ளி தேர்வு வாரிய ஊழியர் ஒருவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சுமார் ஒரு லட்சம் டாலர்களுக்கு சமமான 36 மில்லியன் நைரா அளவிலான பணத்தை பாம்பு விழுங்கிவிட்டதாக ஃபிலோமினா ச்சிசே என்ற ஊழியர் தணிக்கைக் குழுவிடம் கூறியதை அதிகாரிகள் நிராகரித்தனர்.
தேர்வு கட்டணம் வசூலிக்கும் எழுத்தராக பணியாற்றும் ஃபிலோமினா ச்சிசே நைஜீரிய தேர்வுக் வாரியத்தின் அலுவலகத்தில் பணிபுரிபவர்.
ஃபிலோமினா ச்சிசே கூறியதை நிராகரித்த தேர்வு குழு சேர்க்கை மற்றும் மெட்ரிகுலேஷன் கூட்டு வாரியம், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கைகளை தொடங்கிவிட்டதாக பிபிசியிடம் கூறியது.
சமூக ஊடகங்களில் இந்த சம்பவத்தை நைஜீரிய மக்கள் கேலி செய்தனர்.
ஒரு பாம்பால் இந்த அளவுக்கு பணத்தை கையாள முடியாது என்று ஒருவர் டிவிட்டர் செய்தியில் பகடி செய்கிறார்.
பாம்புக்காக ஒரு ட்விட்டர் கணக்கு கூட அமைக்கப்பட்டுவிட்டது. மிகவும் களைப்பாக இருக்கிறது என்று அது கூறுகிறது.
"பணம் விழுங்கும் பாம்பின் மீது எந்தக் கருணையும் காட்டப்படாது" என்று, கழுகு ஒன்று பாம்பை தூக்கிச் செல்லும் புகைப்படத்துடன் நைஜீரிய ஊழல் தடுப்புக் குழு, கேலியாக ஒரு ட்விட்டர் பதிவை பதிலாக வெளியிட்டிருக்கிறது.
பிற செய்திகள்:
- ''நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு, தேர்தலை நடத்துங்கள்''- ராஜபக்ஷ
- 20 நாட்கள் மலம் கழிக்காத இவருக்கு என்னவானது தெரியுமா?
- என்னை விரும்பிய கணவர் படுக்கையில் என்னை தண்டித்தது ஏன்?
- கண்ணழகி பிரியா பிரகாஷ் யார்? சமூக ஊடகங்களில் வைரலானது எப்படி?
- “இங்கிலாந்து நாட்டை உருவாக்கியது யார்?”- நூற்றாண்டுகள் சந்தேகத்தை தீர்த்த ஆய்வு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்