You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
“இங்கிலாந்து நாட்டை உருவாக்கியது யார்?”- நூற்றாண்டுகள் சந்தேகத்தை தீர்த்த ஆய்வு
இங்கிலாந்தின் உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றிய வைக்கிங் ராணுவ படைகளுக்கு என்ன நிகழ்ந்தது என்று தெரியாமல் இருந்தது. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அந்த மர்மத்தின் முடிச்சுகளை அவிழ்த்துள்ளதாகத் தெரிகிறது.
டெர்பிஷைரின், ரெப்டானில் உள்ள செயிண்ட் வின்ஸ்டன் தேவாலயம் அருகே நடந்த ஓர் அகழ்வாய்வில் ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த 250 எலும்பு கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. அந்த எலும்புக் கூடுகளின் காலம் 9ம் நூற்றாண்டு என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
ஹீத்தன் ராணுவம் 866 ஆம் ஆண்டு கைப்பற்றும் நோக்கத்துடன் இங்கிலாந்துக்குள் முன்னேறியது. ஆல்ஃப்ரெட் அந்த படைகளை தடுத்து நிறுத்தினார்.
பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த காட் ஜர்மன், "இத்தனை நாள் அந்த ராணுவத்துக்கு என்ன ஆனது என்ற தடயமே இல்லாமல் இருந்தது. இந்த எலும்புக் கூடுகள் மூலம் அந்த தடயம் கிடைத்துள்ளது," என்கிறார்.
மூர்க்கமான படையாக இருந்த வைக்கிங்ஸ், 866 ஆம் ஆண்டு, ஒரு ஆக்கிரமிப்பு ராணுவப் படையாக உருவாகியது.
மானுடவியல் மற்றும் தொல்லியல் துறையின் பேராசிரியர் ஜர்மன் சொல்கிறார், "இங்கிலாந்து எப்படி உருவாகியது என்ற சரித்திரத்தின் முக்கியப் பகுதி இது."
ஆங்கிலோ சாக்சன் அரசின் வீழ்ச்சி, வைக்கிங் அரசின் உருவாக்கம் அதற்கு ஆல்ஃபிரடின் எதிர்வினை என எல்லாம் சேர்ந்துதான் இங்கிலாந்தை உருவாக்கியது. ஆனால், போதுமான பெளதீக சான்றுகள் இல்லாமல் இருந்ததால், அதற்கு உரிய முக்கியத்துவம் தரப்படாமல் இருந்தது.
வைக்கிங் படைகள் 873 ஆம் ஆண்டு குளிர்காலத்தில் ரெப்டானில் முகாமிட்டு இருந்தன. ஆனால், அதன் பிறகு அந்தப் படைகளுக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை.
செயின்ட் விஸ்டன் தேவாலயத்தில் மர்மமாக இருந்த ஒரு சிறு மேட்டு பகுதியை 1970 மற்றும் 80 ஆகிய அண்டுகளில் அகழ்ந்து பார்த்ததில் 264 பேரின் எச்சங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டன.
அந்த 264 பேரில் 20 சதவீதம் பேர் பெண்கள். அந்த எலும்புக் கூடுகளில் போர் காயங்கள் ஏற்பட்டதற்கான தடயங்கள் இருந்தன.
முன்பு, கார்பன் டேட்டிங் மூலமாக அந்த எலும்புகூடுகளின் காலத்தை கணக்கிட்டதில், அவை வைக்கிங் படையெடுப்புக்கு 200 ஆண்டுகள் முந்தையது என்று கண்டுப்பிடிக்கப்பட்டது.
ஆனால், இந்த புதிய ஆய்வு அதனை மாற்றி உள்ளது.
ஜர்மன், "இந்த அகழ்வாய்வில் கண்டுப்பிடிக்கப்பட்ட எலும்புகளில் பெண் எலும்புகளும் உள்ளன. அதில் போர் காயங்கள் காணப்படுகின்றன. இதன் மூலம் போரில் பெண்களின் பங்கு குறித்து புரிந்துக் கொள்ள முடிகிறது." என்கிறார்.
பிற செய்திகள்:
- சிரியாவில் சுட்டு வீழ்த்தப்பட்ட ரஷ்யப் போர் விமானம்
- "நொறுக்குத் தீனி அதிகம் சாப்பிடும் குழந்தைகளுக்கு புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம்"
- யு19 உலகக்கோப்பை: இந்திய வெற்றிக்கு வித்திட்ட ஐந்து வீரர்கள் இவர்கள்தான்
- `என் படுக்கையை பகிர்ந்து, திருமணத்துக்கு மறுத்தவனின் குழந்தையை நான் ஏன் வளர்க்கிறேன்?’ #HerChoice
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :