20 நாட்கள் மலம் கழிக்காத இவருக்கு என்னவானது தெரியுமா?

20 நாட்கள் மலம் கழிக்காத இவருக்கு என்னவானது தெரியுமா?

பட மூலாதாரம், PETER PARKS

போதை மாத்திரைகளை விழுங்கியதாக இங்கிலாந்தின் எசெக்ஸ் நகர போலீசாரால் சந்தேகிக்கப்பட்டு கைதுசெய்யப்பட்டுள்ள நபர் ஒருவர் இருபது நாட்களாகியும் மலம் கழிப்பதற்கு மறுப்புத் தெரிவித்து வருகிறார்.

மலம் கழிப்பதற்கு மறுப்புத் தெரிவித்து இவர் தொடங்கிய போராட்டம் தற்போது இருபது நாட்களை கடந்துள்ளது. இதனால், வழக்கை முன்னெடுத்து செல்ல முடியாமல் போலீசார் சோர்வடைந்துள்ளனர்.

சந்தேக நபர் தொடர் கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளதுடன், தினசரி மருத்துவப் பரிசோதனைகளும் செய்யப்படுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.\

"ஒரு குறிப்பிட்ட காலம்தான் மலத்தை வெளியேற்றாமல் பொறுத்திருக்க முடியும்" என்று இங்கிலாந்திலுள்ள இரைப்பை குடலியல் மருத்துவமனையை சேர்ந்த த்ரிஷ் மக்னைர் கூறுகிறார்.

20 நாட்கள் மலம் கழிக்காத இவருக்கு என்னவானது தெரியுமா?

பட மூலாதாரம், Getty Images

தொடர்ந்து பல நாட்கள் மலம் கழிக்காமல் இருப்பதற்கு மனதிடம் மட்டும் போதாது. உங்களால் மலம் கழிப்பதை தவிர்க்க முடியாது.

"ஒரு குறிப்பிட்ட நிலையில் மலம் தானாகவே வெளியேறி, மலக்குடல் காலியாகிவிடும். பெரும்பாலானோர்க்கு இது நடந்தேறியுள்ளது" என்கிறார் த்ரிஷ்.

நீங்கள் கழிப்பறைக்கு செல்வதற்கு எவ்வளவு தாமதம் செய்கிறீர்களோ, அவ்வளவு அசௌகரியத்தை நீங்கள் அனுபவிக்க வேண்டியிருக்கும்.

சந்தேக நபரின் இந்த போக்கை கையாள்வதற்கு போலீசார் தயாராகவே இருந்தனர்.

"சந்தேக நபரால் தனது குடல் நகர்வதையும், அது காலியாவதற்கு முயல்வதையும் உணர முடியும். அவர் தனது மலம் வெளியேறுமிடத்தை இறுக்கமாக வைத்திருக்க முயல்வார்" என்று த்ரிஷ் மேலும் கூறுகிறார்.

20 நாட்கள் மலம் கழிக்காத இவருக்கு என்னவானது தெரியுமா?

பட மூலாதாரம், Getty Images

மேலும், சந்தேக நபர் உணவு உட்கொள்வதற்கும் மறுப்பதால், அது இயற்கையின் அழைப்பை எதிர்த்து நிற்பதை எளிதாக்குகிறது.

ஆனால், இந்த வழிமுறையும் பிரச்சனையை தீர்ப்பதற்கு வழிகோலவில்லை.

"நீங்கள் உணவு உட்கொள்ளவில்லை என்றாலும் கூட, குடல் நகர்ந்துகொண்டேதான் இருக்கும். ஏனென்றால், நீங்கள் மலத்தில் காணும் மூன்றில் ஒரு பகுதி மட்டுமே உணவு குப்பைகள்" என்கிறார் த்ரிஷ்.

"அதில் பெரும்பாலும் உடலுக்கு நன்மை பயக்கக்கூடிய பாக்டீரியாக்கள் இறந்த நிலையிலும், அதிகளவிலான திரவமும் இருக்கும்."

வெளிப்படையான அசௌகரியத்தைத் தவிர, உங்களுக்கு நீங்களே கடுமையான விளைவை ஏற்படுத்திக் கொள்ளலாமா?

இது போன்ற விடயங்களில், இது சாத்தியமில்லை.

20 நாட்கள் மலம் கழிக்காத இவருக்கு என்னவானது தெரியுமா?

பட மூலாதாரம், RAMZI HAIDAR

"இதுவொரு கடுமையான சூழ்நிலையாக இருந்தாலும், நீண்டகாலம் நீடிக்க கூடியதல்ல" என்று த்ரிஷ் கூறுகிறார்.

"உடல் முழுவதும் நஞ்சை உண்டாக்கி பேரழிவை உண்டாக்கும் நஞ்சுக்கள் அவ்வளவு குறைவான காலத்தில் உண்டாகாது."

"குடலிலுள்ள குழாய்கள் சுருங்கி அதன் காரணமாக கடுமையாக அசௌகரியத்தைதான் அனுபவிக்க வேண்டியிருக்கும்."

பல நாட்களுக்கு மலம் கழிக்காமல் இருந்தால் குடல் வீக்கமடைவதற்கும், வெடிப்பதற்கும் சிறிது வாய்ப்புள்ளதாக கூறும் த்ரிஷ், இளவயதினருக்கும், ஆரோக்கியமானவர்களுக்கும் அவ்வாறு நடப்பதற்கு முன்னதாகவே குடலிலுள்ள மலம் தானாக வெளியேறிவிடும் என்று கூறுகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :