வட கொரியாவில் நடந்தது ராணுவ அணிவகுப்பு
தென் கொரியாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி தொடக்க விழாவுக்கு ஒரு நாளுக்கு முன்னர், அந்நாட்டு தலைவர் கிம் ஜாங்-உன் பங்கேற்ற ராணுவ அணிவகுப்பை வட கொரியா நடத்தியுள்ளது.
வட கொரியா அதனுடைய ராணுவ அணிவகுப்பை பெருமையாக அடிக்கடி கூறிக்கொள்கிறது. ஆனால், தாமதமாக ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி காணொளிகள் வழியாகவே தகவல்கள் வெளியாகின்றன.

பட மூலாதாரம், Reuters
இந்த அணிவகுப்பு வழக்கமாக ஏப்ரல் மாதம் நடைபெறும். ஆனால் இதனை முன்னரே நடத்தியிருப்பது குளிர்கால ஒலிம்பிக் போட்டி மூலம் வட மற்றும் தென் கொரிய உறவுகளை புதுப்பித்து கொள்வதற்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
ஆனால், வட கொரியாவின் குளிர்கால ஒலிம்பிக் பிரதிநிதிக் குழுவை தங்கள் அதிபர் சனிக்கிழமை சந்திப்பார் என்று தென் கொரியா அறிவித்துள்ளது.

பட மூலாதாரம், AFP
மூன் ஜியே-இன் 22 பேர் அடங்கிய இந்த அணியோடு மதிய விருந்து உண்பார்.
இந்த அணியில், வட கொரியாவின் சம்பிரதாய தலைவரான கிம் யோங்-நாமும், கிம் ஜாங்-உன்னின் செல்வாக்கு மிக்க தங்கையான கிம் யோ-ஜாங்கும் அடங்குகின்றனர்.

பட மூலாதாரம், KCNA
இந்த இருவரும் வட கொரியாவின் ராணுவ அணிவகுப்பில் இருந்துள்ளனர்.
பிற செய்திகள்
- குழந்தைகளிடம் பாலியல் தொல்லை: தேசிய மன்னிப்பு கேட்கிறது ஆஸ்திரேலியா
- மோதி ஊரில் பள்ளி பகலுணவுத் திட்ட ஊழியரான தலித் ‘தற்கொலை‘
- பல ஆண்டு தாமதமாக புகார் கொடுத்தால் வழக்கு பதியலாமா? என்ன சொல்கிறது சட்டம்?
- நான் துரத்திய ஒரே ஆண்மகன் 'பேட்மேன்' முருகானந்தம்தான் : ட்விங்கிள் கன்னா
- பிரிட்டன் ஆதிகுடிகளின் நிறம் கருப்பு- ஆச்சரியம் தரும் ஆய்வு முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













