சீனாவில் 'ராணுவ டாங்கர்' வடிவமைத்தவருக்கு என்ன நேர்ந்தது?- சுவாரஸ்ய நிகழ்வு
பழைய டிரக்கை டாங்கராக மாற்றிய திறமையை பெருமையுடன் இணையதளத்தில் பதிவிட்டவருக்கு பாராட்டுக்கு பதில் அபராதம் விதிக்கப்பட்டு, ஓட்டுநர் உரிமமும் ரத்து செய்யப்பட்டது.

பட மூலாதாரம், CCTV
சி.சி.டி.வி நியூஸ் வெளியிட்ட செய்திகளின்படி, சீனாவில் தெற்கு குவான்ஷி மாகாணத்தில் லெபின் என்ற நகரில் வசிக்கும் ஹிவாஹிங் என்பவர் இரண்டு மாதம் உழைத்து தனது பழைய டிரக்கை டாங்கராக வடிவமைத்தார்.
அதில் ஒரு துப்பாக்கி மற்றும் ரேடார் டிஷ்ஷையும் பொருத்தினார். தனது திறமையும் உழைப்பையும் பறைசாற்றும் விதமாக அதை அவர் இணையத்தில் வெளியிட்டார்.
சி.சி.டி.வி செய்திகளின்படி, அவர் தனது நண்பருக்கு சமூக ஊடகம் மூலம் டாங்கரின் புகைப்படத்தை அனுப்பினார். ஆனால், சமூக ஊடகங்களை கூர்ந்து கவனித்து வரும் சீன அதிகாரிகளின் கண்ணிலும் டாங்கர் புகைப்படம் தென்பட்டது.
தனது புதிய டாங்கரை சாலையில் களம் இறக்க முடிவு செய்திருந்த ஹிவாஹிங், அதற்கு முன்னரே ஜனவரி 22ஆம் தேதியன்று போலிசார் அவரை தடுத்து நிறுத்தினார்கள்.

பட மூலாதாரம், MIAOPAI
உரிமம் ரத்து
ஊடக தகவல்களின்படி, ஹிவாஹிங்குக்கு 1750 யுவான் (இந்திய மதிப்பில் 17,805 ரூபாய்) அபராதம் விதிக்கப்பட்டதோடு, அவரது ஓட்டுநர் உரிமமும் ரத்து செய்யப்பட்டது.
ஹிவாஹிங்கிற்கு 'பாதுகாப்பு அறிவு' பற்றி சோதனை செய்வதற்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். ''சாலை போக்குவரத்து பாதுகாப்பு சட்டங்களை மீறியது, பிறருக்கு ஆபத்து ஏற்படுத்துவது'' போன்ற குற்றங்களை செய்திருப்பதாக ஹிவாஹிங் மீது குற்றம் சாட்டப்பட்ட்து.
ஹிவாஹிங் உருவாக்கிய டாங்கரை பறிமுதல் செய்து அதை அழிக்கப்போவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் மக்களை ஆச்சரியப்படுத்தியது. ''ஹிவாஹிங் உருவாக்கிய டாங்கர், போலிசுக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதாக'' ஒருவர் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.
''சாலைகள் டாங்கர்கள் செலுத்துவதற்கானவை அல்ல என்பது புரிந்துக்கொள்ளக் கூடியது கடினமான விடயம் அல்ல'' என்று மற்றொரு சமூக வலைதள பயன்பாட்டாளர் கருத்து தெரிவித்திருக்கிறார்.
''பல்வேறு ஆன்லைன் பிரபலங்களைப் போல இவரும் பிரபலமாகிவிட்டார்'' என்று மற்றொருவர் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













