அமெரிக்கா: சிறப்பு விசாரணை குழு மீதான மெமோ பற்றி டிரம்புக்கு எச்சரிக்கை
அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு நடைபெற்றதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை விசாரிக்கும் சிறப்பு விசாரணை குழுவை தண்டிப்பதற்கு, சர்ச்சைக்குரிய குறிப்பாணையைப் (மெமோ) பயன்படுத்த வேண்டாம் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப்பிடம் மூத்த ஜனநாயக கட்சியினர் எச்சரித்துள்ளனர்.

பட மூலாதாரம், EPA
அவ்வாறு எடுக்கப்படும் நடவடிக்கை முன்னாள் அதிபர் நிக்சனின் காலத்திற்கு பிறகு இதுவரை பார்க்கப்படாத அரசியல் சாசன நெருக்கடியை உருவாக்கும் என்று அவர்கள் எச்சரிக்கை விடுத்து்ள்ளனர்.
அமெரிக்க புலனாய்வு நிறுவனமான எஃப்.பி.ஐ. அதனுடைய அதிகாரங்களை தவறாக பயன்படுத்துவதாக குடியரசு கட்சியினர் எழுதிய இந்த குறிப்பாணை குற்றஞ்சாட்டுகிறது.
குறிப்பாணை அறிவிப்பை உறுதிப்படுத்தியுள்ள அதிபர் டிரம்ப், இதுவொரு சங்கடத்திற்குரிய விடயத்தை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப் உதவியாளரிடம் உளவு பார்க்க ஆதாரமற்ற சான்றுகளை ஃஎப்பிஐ பயன்படுத்தியதாக குடியரசு கட்சியினரால் எழுதப்பட்ட இந்த மெமோ கூறுகிறது.
டிரம்பின் தேர்தல் பிரசாரத்திற்கும், ரஷ்யாவுக்கும் இடையில் தொடர்பு இருந்ததாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதை சீர்குலைக்கும் நோக்கத்தில் இந்த மெமோ வெளியிடப்பட்டுள்ளதாக ஜனநாயக கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
அதிபர் டொனால்ட் டிரம்ப் இதனை தொடர்ந்து மறுத்து வருகிறார்.
இந்த மெமோ வெளியிட்டுள்ளதை கண்டித்திருக்கும் ஃஎப்பிஐ, முக்கியமான உண்மைகள் விடப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












