ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள்

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.

பிரிவினைவாதிகளின் பிடியில்

ஏமன்

பட மூலாதாரம், EPA

பிரிவினைவாதிகளின் கட்டுபாட்டுக்குள், ஏமனின் தெற்கு துறைமுக நகரமான ஏடன் முழுக்க சென்றதாக ஏமன் மக்கள் கூறுகின்றனர். தெற்கு ஏமனை தனி நாடாக அறிவிக்கக்கோரும் ஒரு பிரிவினைவாத குழுவுக்கும், அரசுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக கடும் சண்டை நடந்து வருகிறது. இந்த சண்டையில் இது வரை 9245 மக்கள் இறந்துள்ளனர், 3 மில்லியன் மக்கள் வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்து உள்ளனர்.

Presentational grey line

மீண்டும் தலிபான்கள் ஆதிக்கம்

தலிபான்

ஆப்கன் தலிபான்களை வீழ்த்த, அமெரிக்கா தலைமையிலான படை பல பில்லியன் டாலர்களை செலவு செய்துள்ளது. ஆனால், கடந்த சில நாட்களாக தலிபான்களின் தாக்குதல் அதிகரித்துள்ளது. இப்படியான சூழலில் பிபிசி மேற்கொண்ட ஓர் ஆய்வில், ஆப்கனின் 70 சதவீத பரப்பு தலிபான்கள் ஆதிக்கம் செலுத்துவதாக தெரிய வந்துள்ளது. ஆனால், ஆப்கன் அரசு இதனை மறுத்துள்ளது.

Presentational grey line

பல பில்லியன் டாலர்கள்

செளதி இளவரசர்கள், அமைச்சர்கள், தொழிலதிபர்கள் அடைத்து வைக்கப்பட்டு இருந்த சொகுசு விடுதி

பட மூலாதாரம், Reuters

உழல் மற்றும் முறைகேடு குற்றச்சாட்டுகளில், செளதி இளவரசர்கள், அமைச்சர்கள், தொழிலதிபர்கள் பலர் கடந்த நவம்பர் மாதம் செளதி ஊழல் தடுப்பு பிரிவால் கைது செய்யப்பட்டனர். பின்னர், அரசு முன் வைத்த ஒரு நிதி தீர்வை அவர்கள் ஏற்றுக் கொண்டதை அடுத்து அவர்களில் பெரும்பாலானவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து, அவர்கள் முறைகேடாக சேர்த்ததாக கூறப்படும் சொத்துகள் கைப்பற்றப்பட்டன. இந்த சொத்துகளின் மதிப்பு 106.7 பில்லியன் டாலர்கள் என அரசு தகவல்கள் கூறுகின்றன.

Presentational grey line

தொலைக்காட்சி நடிகர் மரணம்

மார்க்

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்காவின் பிரபலமான தொலைக்காட்சி தொடரான கிளீ-வில் நடித்த அமெரிக்க நடிகர் மார்க் சல்லீங் மரணம். அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று அமெரிக்க ஊடகங்கள் கூறுகின்றன. பிபிசியிடம் பேசிய மார்க்கின் வழக்கறிஞர், இறந்த நிலையில், மார்க்கின் உடல் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள அவரது வீட்டிலிருந்து கண்டெடுக்கப்பட்டது என்றார். குழந்தைகளை பாலியல் வன்புணர்வு செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் 2015 ஆம் ஆண்டு மார்க் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது.

Presentational grey line

அதிகாரிகள் ராஜிநாமா

ஹவாய்

ஹவாய் அவசரகால மேலாண்மை முகமையை சேர்ந்த இரண்டு முக்கிய குடிமை அதிகாரிகள் தங்கள் பதவியை ராஜிநாமா செய்துள்ளனர். ஜனவரி 13 ஆம் தேதி ஹவாய் மக்களின் கைபேசிக்கு ஒரு தகவல் வந்தது. அதில், `ஏவுகணை தாக்குதலுக்கு ஹவாய் உள்ளாக இருக்கிறது. அனைவரும் பாதுகாப்பான பகுதிக்கு செல்லவும்` என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. பின்னர், இது அவசரகால மேலாண்மை முகமையிலிருந்து வந்த தவறான தகவல் என்று தெரியவந்தது. இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் சூழலில், இரண்டு அதிகாரிகள் ராஜிநாமா செய்துள்ளனர்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: