இரான் மீது மீண்டும் புதிய தடைகளை விதிக்கிறதா அமெரிக்கா?

பட மூலாதாரம், Handout
இரான் மீது புதிய தடைகளை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விதிக்க வேண்டும் என தாம் எதிர்பார்பதாக அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்டீவ் மனூஷின் கூறியுள்ளார்.
2015ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தத்தின் கீழ் இரான் மீதுள்ள பொருளாதார தடைகளை தள்ளுபடி செய்வது குறித்து வரும் வெள்ளிக்கிழமைக்குள் டிரம்ப் முடிவெடுக்க வேண்டும் என்று வந்த தகவலையடுத்து ஸ்டீவ் இவ்வாறு கூறியுள்ளார்.
முன்னதாக, சர்வதேச பாதுகாப்புக்கின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, ஒப்பந்தத்தை டிரம்ப் ஆதரிக்க வேண்டும் என ஐரோப்பிய சக்திகள் வலியுறுத்தி இருந்தன.
இரான் தனது அணுசக்தி எரிபொருள் உற்பத்தியை குறைத்துக் கொள்வதாக ஒப்புக் கொண்டதையடுத்து பொருளாதார தடைகள் நீக்கப்பட்டதை, டிரம்ப் விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டீவ், இரான் மீது புதிய தடைகள் விதிக்கப்படும் என தாம் எதிர்பார்பதாக கூறினார். முன்னதாக இரான் நாட்டின் தனிநபர்கள் மற்றும் வணிகங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என செய்திகள் தெரிவித்தன.
பிற செய்திகள்:
சமூகஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்








