ஜெருசலேம் விவகாரம்: தூதரை திரும்ப அழைத்த பாலத்தீனம்

பட மூலாதாரம், AFP
பேச்சுவார்த்தைக்கான தங்களது அமெரிக்க தூதரை திரும்ப அழைக்கப்போவதாக பாலத்தீனம் அறிவித்துள்ளது.
அண்மையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேத்தை அங்கீகரிப்பதாக அறிவித்தார் அதனை தொடர்ந்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.
டிரம்பின் சமீபத்திய நடவடிக்கைகளையடுத்து, தாங்கள் அமெரிக்காவின் எந்த அமைதி ஏற்பாட்டுக்கும் உடன்படப்போவதில்லை என்று பாலத்தீன அதிபர் மஹ்முத் அப்பாஸ் தெரிவித்தார்
கலவரம்
டிரம்ப் ஜெருசலேத்தை தலைநகராக அங்கீகரிப்பதாக அறிவித்ததை அடுத்து காஸாவில் போராட்டமும், கலவரமும் வெடித்தது.
டிரம்ப் அறிவிப்பை தொடர்ந்து ஏற்பட்ட கலவரங்களில் சிக்கி இதுவரை 13 பாலத்தீனியர்கள் இறந்துள்ளார்கள். இதில் பெரும்பான்மையானவர்கள், இஸ்ரேல் படைகளுடன் ஏற்பட்ட மோதலில் இறந்தவர்கள்.
பாலத்தீனிய வெளியுறவுத் துறை அமைச்சர் ரியாட் அல் மாலிகி, பாலத்தீனிய விடுதலை அமைப்பு (பி.எல்.ஓ) தூதர் ஹுசம் சோம்லோட்டி திரும்ப அழைத்துக் கொண்டதாக பாலத்தீனிய செய்தி நிறுவனமான வாஃபா கூறி உள்ளது.
ஆக்கிரமிப்பு போர்
இஸ்ரேல் - பாலத்தீனிய பிரச்சனைக்கு ஜெருசலேம்தான் மைய காரணமாக இருக்கிறது.
துருக்கியின் ஆக்கிரமிப்பில் இருந்த கிழக்கு ஜெருசலேம் பகுதிகளை 1967 ஆம் ஆண்டு மத்திய கிழக்கு போரில் இஸ்ரேல் கைப்பற்றியது.
பாலத்தீனியர்கள் எதிர்காலத்தில் அமைய இருக்கும் தங்கள் தேசத்துக்கு கிழக்கு ஜெருசலேம்தான் தலைநகராக இருக்கும் என்று கூறுகிறார்கள்.
பாலத்தீன அதிபர் மஹ்முத் அப்பாஸ் ஞாயிற்றுக்கிழமை, ஜெருசலேம் "பாலத்தீன மக்களின் அழியா தலைநகராக இருக்கும்" என்றார்.
ஜெருசலேம் மீதான இஸ்ரேல் இறையாண்மை இதுவரை சர்வதேச சமூகத்தினால் ஒப்புக் கொள்ளப்படவில்லை. அதனால், இஸ்ரேலுக்கான தங்களது தூதரங்களை இஸ்ரேலின் மைய நகரமான டெல் அவிவில்தான் அமைத்துள்ளன. அண்மையில் டிரம்ப் அமெரிக்க தூதரகத்தை ஜெருசேலத்திற்கு மாற்றும் பணிகளை தொடங்க உத்தரவிட்டார்.
பிற செய்திகள்:
- 'ரஜினியை யாரோ தவறாக வழிநடத்துகிறார்கள்'
- "நான் அரசியலுக்கு வருவது உறுதி... காலத்தின் கட்டாயம்": நடிகர் ரஜினிகாந்த்
- பத்மாவதி திரைப்படத்தை வெளியிட தணிக்கை வாரியம் அனுமதி
- பிபிசி தமிழ் நேயர்களின் மெய் சிலிர்க்க வைக்கும் கானுயிர் காட்சிகள்
- அரசியலில் ரஜினி: ட்விட்டரில் குவிந்த பிரபலங்களின் ஆதரவும் எதிர்ப்பும்!
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












