ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள்
கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.
குடியேறிகளை புறக்கணிக்காதீர்கள்: போப் பிரான்சிஸ் வலியுறுத்தல்

பட மூலாதாரம், AFP
கிறிஸ்துமஸ் ஈவ்வை முன்னிட்டு உரையாற்றிய போப் பிரான்சிஸ், "தங்கள் நிலத்தில் இருந்து விரட்டப்பட்ட பல மில்லியன் கணக்கான குடியேறிகளை உலக நாடுகள் புறக்கணிக்க கூடாது" என்று வலியுறுத்தினார்.

ஸ்பெயின் அரசர் அழைப்பு

பட மூலாதாரம், AFP
ஸ்பெயினின் கேட்டலோனியாவில் நடந்த சட்டவிரோதமான பொதுமக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பை தொடர்ந்து நிலவி வரும் வீழ்ச்சியை சமாளிக்கும் வகையில் அனைவரும் ஒற்றுமையாக இணைந்து செயல்படுவதற்கான ஒரு புதிய அழைப்பை ஸ்பெயினின் அரசர் வெளியிட்டுள்ளார்.

சீனாவிலேயே தயாரிக்கப்பட்ட AG600 விமானத்தின் சோதனை ஓட்டம் வெற்றி

பட மூலாதாரம், AFP
சீனாவிலேயே தயாரிக்கப்பட்ட நிலம் மற்றும் நீரிலிருந்து மேலெழும்பும் விமானமான AG600 குண்லோங் தனது ஒரு மணிநேர சோதனை பயணத்தை வெற்றிகரமாக முடித்தது.
போயிங் நிறுவனத்தின் 737 ரக விமானத்தை ஒத்துள்ள இது சீனாவின் கடற்படை மற்றும் ராணுவ நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படும் என்று தெரிகிறது.

எமிரேட்ஸ் நிறுவன விமானங்கள் துனிசியாவில் தரையிறக்க தடை

பட மூலாதாரம், AFP/Getty
எமிரேட்ஸ் விமான நிறுவனத்தின் விமானம் ஒன்றில் துனிசிய பெண்களை ஏற்றுவதற்கு மறுத்தததால் அந்நிறுவன விமானங்களை நாட்டின் தலைநகரான துனிசிலுள்ள விமான நிலையத்தில் தரையிறக்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜெருசலேத்திற்கு தனது தூதரகத்தை மாற்றுகிறதுகுவாட்டமாலா

பட மூலாதாரம், Reuters
இஸ்ரேலிலுள்ள குவாட்டமாலா தூதரகத்தை ஜெருசலேம் நகரத்துக்கு மாற்றுவதற்கு அந்நாட்டு அதிபர் ஜிம்மி மொராலஸ் உத்தரவிட்டுள்ளார்.
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் பேசிய பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மொராலஸ் தெரிவித்தார்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












