பிட்காயின் - எளிதில் உடையும் நீர்க்குமிழியா? இல்லை அதுதான் எதிர்காலமா?

பிட்காயின்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ரோரி செலன்-ஜோன்ஸ்
    • பதவி, பிபிசி

முதலாவதாக நான் ஒரு பிட்காயினின் பயனாளி என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்ற ஆண்டு ஏப்ரல் மாதம் கிரிப்டோகரன்சி பற்றிய ஒரு கட்டுரைக்கான பணியில் ஈடுபட்டிருந்தபோது 0.17 பிட்காயினை 87 டாலர்களுக்கு வாங்கினேன்.

பிட்காயினுக்கான கணக்கை எனது திறன்பேசியில் ஆரம்பித்து கிட்டத்தட்ட 18 மாதங்களுக்கும் மேலான நிலையில், அதன் மீதமான பெருகிவரும் நம்பிக்கை தற்போது 1,713 டாலர்களை வந்தடைந்துள்ளது.

பிட்காயின்களின் இந்த அபரிதமான வளர்ச்சி மின்னணு காலத்திற்கு ஒரு புதுவிதமான பிரச்சனையை உருவாக்கியுள்ளது.

பிட்காயினை எவ்வாறு நிர்வகிக்க வேண்டும், அதன் பரிமாற்றங்களில் நடந்த திருட்டுகள் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகளிடம் இருந்த வந்த எச்சரிக்கைகள் போன்ற பல்வேறு தடைக்கற்களை கடந்து தற்போது ஒரு பிட்காயினின் மதிப்பு 10,000 டாலர்கள் என்ற மதிப்பை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது.

ஆனால், வல்லுநர்கள் ஒவ்வொருமுறை பிட்காயினின் மதிப்பு குறையப்போகிறது என்று எச்சரிக்கும்போதும் அதன் மதிப்பு சில நாட்கள் குறையத்தொடங்கி, உடனே அதிகரித்தது.

பிட்காயின் மூலம் பீட்ஸா

ஆனால், அதே வேளையில் ஒரு பணத்தின் சிறப்பம்சங்களில் ஒன்றாக கருதப்படும் பணப்பரிமாற்றங்களில் பயன்படுத்தப்படும் தகுதியை பிட்காயின் இழந்துவிட்டது.

காணொளிக் குறிப்பு, பாகிஸ்தானில் இந்து பெண்ணாக இருப்பது அவ்வளவு சுலபமா? (காணொளி)

சில வருடங்களுக்கு முன்பு பிட்காயினை பயன்படுத்துவதற்கான வழிகள் பற்றி பல செய்திகள் வந்தவண்ணம் இருந்தன. சோரேடிட்ச்சில் உள்ள ஒரு மதுபான விடுதி, ஸ்வாஞ்சேயில் செய்தி முகவரொருவர் தனது வாடிக்கையாளர் ஒருவர் பிட்காயினை பயன்படுத்தி கிட்காட் வாங்கியதாகவும்கூட செய்திகள் வந்தன. ஏன், நான் கூட பிட்காயினை கொண்டு பீட்ஸா வாங்கியிருக்கிறேன்.

தற்போது பிட்காயினை வைத்திருக்கும் எவரும் அதை செலவிட விரும்பவில்லை. நாளைக்கு அதன் மதிப்பு மேலும் அதிகமாகும் நிலையில் எப்படி செலவிட விரும்புவார்கள்?

நிலைத்தன்மையற்றது

பிட்காயினை நாணயமாற்றுதல் செய்வதற்கான கட்டணங்கள் அதிகரித்து வரும் சூழ்நிலை மற்றும் பணமோசடி நடந்ததற்கான தடயங்களை சட்ட அமலாக்க முகமைகள் தேடி வரும் தற்போதைய நிலையில், ஒருகாலத்தில் பிட்காயினின் ஆதரவாளர்கள் கூறியதைப் போன்று அது உலகம் முழுவதும் பணப்பரிமாற்றம் செய்வதற்கான எளிதான மற்றும் மலிவு விலை வழியாக தற்போது இல்லை.

தற்போது பெரிய விடயமாக பார்க்கப்படும் பிட்காயினின் எதிர்காலத்தை அதன் பரிமாற்றத்திற்காக வீணாக்கப்படும் ஆற்றல் விளக்குகிறது.

காணொளிக் குறிப்பு, தண்ணீருக்குள் சிப்பிகளை பாதுகாப்பு கேடயமாக பயன்படுத்தி தப்பிக்கும் தந்திரமான ஆக்டோபஸ்

தொடர்ந்து அதிகரித்து வரும் பிட்காயினின் மதிப்பு பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய இரண்டு வகைகளிலுமே நிலைத்திருக்க முடியாது.

ஜேபி மோர்கன் சேஸின் தலைவர், கடந்த அக்டோபர் மாதம் பிட்காயின் முதலீட்டாளர்களை "முட்டாள்கள்" என்று விமர்சித்தார்.

அவர் எப்போது கிரிப்டோகரன்சிகள்தான் எதிர்காலம் என்கிறாரோ அதுவே பிட்காயினை விற்பதற்கான சரியான சமயமாக இருக்கலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :