ஊழல் வழக்கிலிருந்து தப்பிக்க செளதி இளவரசர் கொடுத்த விலை என்ன?

ஒரு பில்லியன் டாலர் உடன்படிக்கையில் விடுவிக்கப்பட்டார் செளதி இளவரசர்

பட மூலாதாரம், HASSAN AMMAR

ஊழல் எதிர்ப்பு நடவடிக்கையாகக் கைது செய்யப்பட்ட செளதி அரேபியாவின் இளவரசர் மிதெப் பின் அப்துல்லா, மூன்று வாரங்களுக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

அரியாசனத்திற்கான போட்டியாளராக பார்க்கப்பட்ட மிதெப், ''ஏற்கத்தக்க உடன்பாடாக'' ஒரு மில்லியன் டாலருக்கும் அதிகமான பணத்தை தருவதாக ஒப்புக்கொண்ட பிறகு விடுவிக்கப்பட்டார்.

ஊழல் எதிர்ப்பு நடவடிக்கையாக நவம்பர் 4-ம் தேதி கைது செய்யப்பட்ட 200க்கும் அதிகமான அரசியல் மற்றும் தொழில் பிரபலங்களில் இவரும் ஒருவர்.

மேலும், 3 பேரும் செளதி அரசுடன் உடன்படிக்கைக்கு ஒப்புக்கொண்டுள்ளனர்.

மிதெப் பின் அப்துல்லா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மிதெப் பின் அப்துல்லா

''ஆம், இளவரசர் மிதெப் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.'' என அரசுக்கும் மிகவும் நெருக்கமான ஒரு தகவல் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளது.

இளவரசர் முகமது பின் சல்மானின் உறவினரான இவர், செளதி தேசிய ராணுவத்தைத் தலைமை தாங்கியவர்.

காணொளிக் குறிப்பு, ரியாத்தில் ஆடம்பர ஹோட்டல் சிறையில் நடப்பது என்ன?

ஊழல் எதிர்ப்பு நடவடிக்கையில் கைது செய்யப்பட்டவர்களில் மிகவும் அரசியல் செல்வாக்கு உள்ள அரச குடும்பத்தவர் இவர்.

முன்னாள் மன்னரான அப்துல்லாவின் மகனான இவர், கைது செய்யப்படுவதற்கு சில நேரத்திற்கு முன்பு பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட முக்கிய இளவரசர்கள், அமைச்சர்கள் மற்றும் தொழிலதிபர்கள் ரியாத்தில் உள்ள ஆடம்ப ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டனர்.

இவர்களது சொத்துக்களை செளதி அதிகாரிகள் முடக்கினர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :