ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள்
கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.
நீர்மூழ்கி கப்பலுக்கு என்ன ஆனது?

பட மூலாதாரம், EPA
காணாமல் போன அர்ஜென்டினா கடற்படை நீர்மூழ்கி கப்பல் பற்றி மேலும் தகவல் கிடைத்துள்ளன.
நீர்ழூழ்கி கப்பலுக்கும் காற்றை உள்ளிழுத்து தரும் குழாய் வழியாகத் தண்ணீர் புகுந்ததால் அதன் பேட்டரி சேதமானது என்றும், ஊழியர்கள் அந்த பேட்டரியை கழற்றிவைத்து விட்டு, வேறு பேட்டரியை பயன்படுத்து பயணித்துள்ளனர் என்று கடற்படை செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

''மத பாகுபாடு இல்லை''

பட மூலாதாரம், EPA
மியான்மரில் மத ரீதியான பாகுபாடு பார்க்கப்படுவதில்லை என மியான்மர் வந்துள்ள போப் ஃபிரான்சிஸிடம் அந்நாட்டு ராணுவ தளபதி கூறியுள்ளார்.

பாலி விமானநிலையம் மூடல்

பட மூலாதாரம், Getty Images
பாலி எரிமலை வெடிக்கலாம் என்ற அச்சம் தொடர்வதால், இந்தோனீசிய அதிகாரிகள் இரண்டாவது நாளாகப் பாலி விமான நிலையத்தை மூடியுள்ளனர்.

வெடிகுண்டு தாக்குதல்

பட மூலாதாரம், Getty Images
இராக் தலைநகர் பாக்தாத்தின் புறநகர்ப் பகுதியில் நடந்த தற்கொலைப்படை வெடிகுண்டு தாக்குதலில், 9 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












