ஜிம்பாப்வே: ராணுவ தலைவரை சந்திக்கவுள்ளார் முகாபே

ஜிம்பாப்வே

பட மூலாதாரம், Getty Images

ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபே பதவி விலக வேண்டும் என்ற கடுமையான அழுத்தங்களுக்கு மத்தியில், அந்நாட்டு ராணுவத் தலைவரை முகாபே சந்திக்க உள்ளார்.

இந்த மத்தியஸ்தம் ஒரு கத்தோலிக்க பாதிரியாரால் நடத்தப்படுகிறது என அரசு தொலைக்காட்சி கூறியுள்ளது.

ஜிம்பாப்வேவை ஆளும் ஜானு பி எஃப் கட்சியின் நிறுவனரும், நீண்ட கால தலைவருமான ராபர்ட் முகாபேவை கட்சியில் இருந்து நீக்குவதா என்பதை முடிவு செய்ய ஜானு பி எஃப் கட்சியின் கூட்டம் கூட உள்ளது,

தனது மனைவியும், தன்னைவிட 40ஆண்டுகள் சிறியவருமான கிரெஸ் முகாபே அடுத்த அதிபர் ஆவதற்கு வழிவகுப்பதற்காக, நாட்டின் துணை அதிபரான எமர்சன் மனங்காக்வுவாவை கடந்த வாரம் பதவியிலிருந்து நீக்கினார் முகாபே.

ஜிம்பாப்வே

பட மூலாதாரம், Getty Images

பதவிக்கான போராட்டத்தால், 37 ஆண்டுகளாக அந்நாட்டை ஆண்டுவந்த முகாபேவிற்கு எதிராக ராணுவம் நடவடிக்கையை மேற்கொண்டது.

ஜிம்பாப்வே 1980-ல் பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெற்றதில் இருந்து முகாபே அந்நாட்டை ஆட்சி செய்து வருகிறார்.

ராணுவம் கையில் எடுத்ததைக் கொண்டாடும் விதமாக, சனிக்கிழமையன்று ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் கூடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும், முகாபே பதவி விலக வேண்டும் எனவும் மக்கள் வலியுறுத்தினர்.

ஜிம்பாப்வே

பட மூலாதாரம், Getty Images

ஜானு-பி.எஃப் கட்சியின் பத்தில் ஒன்பது மாநில கிளையும், முகாபே பதவி விலக வேண்டும் என கூறியுள்ளது. இன்று நடக்க உள்ள கட்சியின் உயர்மட்ட அமைப்பான, மத்தியக் குழு கூட்டத்தில் ஒன்பது மாநில கிளைகளின் முடிவுக்கு ஒப்புதல் அளிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.

''இது ஒரு திருப்புமுனை. முகாபே மீண்டும் அதிகாரத்திற்கு வருவதற்கான வாய்ப்புகளே இல்லை'' என்கிறார் தலைநகர் ஹராரேவில் உள்ள பிபிசி செய்திளார் ஆண்ட்ரூ ஹார்டிங்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :