ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள்
கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.
முகாபே நீக்கம்?

பட மூலாதாரம், Getty Images
ஜிம்பாப்வேவின் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள ராணுவத்துடன், அந்நாட்டு அதிபர் முகாபே பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். முகாபே பதவி விலக ராணுவத்தினர் கோருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜானு பி எஃப் கட்சியின் ஆட்சிமன்ற தலைவர்கள், முகாபேவை கட்சியில் இருந்து நீக்குவது குறித்து விவாதித்து வருகின்றனர்.

சிரியா: 14 பேர் பலி

பட மூலாதாரம், Getty Images
சிரியாவின் டமாஸ்கஸில், போராளிகள் வசம் இருந்த பகுதியில் சிரிய ராணுவம் நடத்திய தாக்குதலில் 14 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

ரோஹிஞ்சா நெருக்கடியைத் தீர்க்க உதவும் சீனா

பட மூலாதாரம், Reuters
ரோஹிஞ்சா நெருக்கடியைத் தீர்த்து வைக்க, சீனா உதவ முன்வந்துள்ளது என வங்கதேசம் தெரிவித்துள்ளது. சீன வெளியுறத்துறை அமைச்சர் வாங் யி வங்கதேச வெளியுறத்துறை அமைச்சரைச் சந்தித்த போது, வங்கதேசமும், மியான்மரும் இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனையை தீர்க்க வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

நாடு திரும்புவேன்: லெபனான் முன்னாள் பிரதமர்

பட மூலாதாரம், Getty Images
செளதி அரேபியாவில் தனது பதவி விலகலை அறிவித்த லெபனான் முன்னாள் பிரதமர் சாத் ஹரிரி, சில நாட்களில் லெபனான் தலைநகர் பெய்ரூட் திரும்ப உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












