இரான்-இராக் நிலநடுக்கம்: புகைப்படத்தொகுப்பு

இரான்-இராக் நாடுகளுக்கு இடையே அமைந்துள்ள வடக்கு எல்லைப் பகுதிகளில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. 348 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலநடுக்கம் 7.3 என்ற அளவில் பதிவாகி உள்ளது.

இந்த நிலநடுக்கம் ஏற்படுத்திய பாதிப்புகள் குறித்த புகைப்படங்களின் தொகுப்பு.

சுமார் எட்டு கிராமங்கள் இந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக இரானின் ரெட் க்ராஸ் அமைப்பின் தலைவர் மொர்டேசா சலீம் தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், POURIA PAKIZEH/AFP/Getty Images

படக்குறிப்பு, சுமார் எட்டு கிராமங்கள் இந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக இரானின் ரெட் க்ராஸ் அமைப்பின் தலைவர் மொர்டேசா சலீம் தெரிவித்துள்ளார்.
இராக்கில் ஆறு பேர் உயிரிழந்ததாகவும், இந்த பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

பட மூலாதாரம், POURIA PAKIZEH/AFP/Getty Images

படக்குறிப்பு, இராக்கில் ஆறு பேர் உயிரிழந்ததாகவும், இந்த பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
நிலநடுக்கத்தால் பீதியடைந்த மக்கள் தங்கள் குடியிருப்புகளை விட்டு வீதிகளில் தஞ்சமடைந்தனர்.

பட மூலாதாரம், POURIA PAKIZEH/AFP/Getty Images

படக்குறிப்பு, நிலநடுக்கத்தால் பீதியடைந்த மக்கள் தங்கள் குடியிருப்புகளை விட்டு வீதிகளில் தஞ்சமடைந்தனர்.
இரானின் கெர்மன்ஷா மாகாணத்தில் சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கக் கூடும் என அதிகாரிகள் அரசு ஊடகத்திடம் தெரிவித்தனர்.

பட மூலாதாரம், POURIA PAKIZEH/AFP/Getty Images

படக்குறிப்பு, இரானின் கெர்மன்ஷா மாகாணத்தில் சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கக் கூடும் என அதிகாரிகள் அரசு ஊடகத்திடம் தெரிவித்தனர்.
இரானின் வடகிழக்கு எல்லைக்கு அருகில் உள்ள ஹலாபஜாவின் தென்மேற்கிலிருந்து 19 மைல்கள் (30 கி.மீ.) தொலைவில், இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் கூறியது.

பட மூலாதாரம், POURIA PAKIZEH/AFP/Getty Images

படக்குறிப்பு, இரானின் வடகிழக்கு எல்லைக்கு அருகில் உள்ள ஹலாபஜாவின் தென்மேற்கிலிருந்து 19 மைல்கள் (30 கி.மீ.) தொலைவில், இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் கூறியது.
காணொளிக் குறிப்பு, நிலநடுக்கத்திற்கு மத்தியிலும் செய்தி வழங்கிய குர்திஷ் தொலைக்காட்சி.
33.9 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால், துருக்கி, இஸ்ரேல் மற்றும் குவைத்திலும் லேசான நிலஅதிர்வு உணரப்பட்டது.

பட மூலாதாரம், POURIA PAKIZEH/AFP/Getty Images

படக்குறிப்பு, 33.9 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால், துருக்கி, இஸ்ரேல் மற்றும் குவைத்திலும் லேசான நிலஅதிர்வு உணரப்பட்டது.
இந்த நிலநடுக்கம் 7.3 என்ற அளவில் பதிவாகி உள்ளது.

பட மூலாதாரம், POURIA PAKIZEH/AFP/Getty Images

படக்குறிப்பு, இந்த நிலநடுக்கம் 7.3 என்ற அளவில் பதிவாகி உள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :