கேட்டலோனியாவுக்கு முன்கூட்டியே தேர்தல் இல்லை: கார்லஸ் பூஜ்டிமோன்

ஸ்பெயினிலிருந்து தனிநாடாக சுதந்திரம் பெரும் விவகாரத்திற்கு தீர்வு காணும் வகையில், கேட்டலோனிய நாடாளுமன்றத்திற்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படாது என்று கேட்டலன் தலைவரான கார்லஸ் பூஜ்டிமோன் கூறியுள்ளார்.

கார்லஸ் பூஜ்டிமோன்

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, கார்லஸ் பூஜ்டிமோன்

பிராந்திய நாடாளுமன்றம்தான் இதுகுறித்து முடிவெடுக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். கேட்டலன் நாடாளுமன்றம் பெரும்பான்மையாக எடுக்கும் முடிவே அமல்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

கேட்டலோனிய நாடாளுமன்றத்திற்கு தேர்தல் நடத்துவதன்மூலம் அவரின் அதிகாரங்களை பறிக்க ஸ்பெயின் அரசு முடிவு செய்துள்ளது. கேட்டலன் பிராந்தியம் மீது தனது நேரடி ஆட்சியை அமைக்க, ஸ்பெயின் அரசியலமைப்பின் 155-பிரிவு வழிவகை செய்கிறது

வியாழன்று பார்சிலோனாவில் நடைபெற்ற கேட்டலன் அரசாங்க கட்டடத்திற்கு வெளியே பெரிய கூட்டம் கூடியது. இக்கூட்டத்தின்போது பூஜ்டிமோன் சுதந்திரத்தை அறிவிப்பார் என பலரும் நம்பினர்.

கார்லஸ் பூஜ்டிமோன் ஸ்பெயின் அரசின் நேரடி கட்டுபாட்டைத் தவிர்க்கும் பொருட்டு டிசம்பர் மாதத்தில் பிராந்திய தேர்தல்களுக்கு அழைப்பு விடுப்பார் என்றும் அப்போது மிகவும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், இரண்டையும் அவர் செய்யவில்லை.

ஸ்பெயினின் செனட்டிற்கு கடிதம் அனுப்பியுள்ள அவர், கேட்டலோனியாவின் சுதந்திரம் குறித்த விவகாரத்தில், மேட்ரிட் அரசாங்கம் தலையிடும் திட்டம், அரசியல் அமைப்பிற்கு எதிரானது என்று வாதிட்டுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :