இந்தோனீசிய பட்டாசுத் தொழிற்சாலை விபத்தில் குறைந்தது 46 பேர் பலி
இந்தோனீசியாவில் உள்ள பட்டாசுத் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் குறைந்தது 46 பேர் கொல்லப்பட்டனர்; மேலும் பல டஜன் பேர் காயமடைந்தனர் என்று போலீசார் தெரிவித்தனர்.

பட மூலாதாரம், AFP/Getty imaes
தலைநகர் ஜகார்த்தாவுக்கு மேற்குப் பகுதியில் தாங்கெராங் என்ற இடத்தில் உள்ள இந்த தொழிற்சாலை வளாகத்தில் உள்ளூர் நேரப்படி காலை 9 மணிக்கு (கிரீன்விச் நேரம் 2 மணி) விபத்து ஏற்பட்டது.
தாங்கள் இன்னும் பாதிக்கப்பட்டோரை வெளியேற்றிக்கொண்டிருப்பதாக தாங்கெராங் கொடா போலீஸ் தலைவர் ஹேரி குர்னியவான் ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
தொழிற்சாலையில் இருந்து அடர்ந்த வெளியாவதை தொலைக்காட்சியில் வெளியான காட்சிகள் காட்டுகின்றன.
தொழிற்சாலையில் மொத்தம் 103 தொழிலாளர்கள் வேலை செய்வதாக ஜகார்த்தா போலீஸ், குற்றவியல் தலைமை இயக்குநர் நிகோ அஃபின்டா இந்தோனீசியாவின் கொம்பாஸ் தொலைக்காட்சியிடம் தெரிவித்தார்.

43 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும், 46 சடலங்களின் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
காலை பத்து மணிக்கு ஒருமுறையும், மூன்று மணி நேரம் கழித்து ஒரு முறையும் இரண்டு முறை அந்த தொழிற்சாலையில் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததாக நேரில் கண்டவர்களை மேற்கோள் காட்டி உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












