சாலையில் செல்லும்போது செல்பேசியை பார்க்கக் கூடாது: ஹவாயில் புதிய சட்டம்

அமெரிக்க பிராந்தியமான ஹவாயில் உள்ள ஹொனோலுலு நகரம் சாலைகளைக் கடக்கும்போது, பாதசாரிகள் தங்கள் மின்னணு உபரகாரணங்கள் அல்லது கைபேசி ஆகியவற்றைப் பார்க்க தடை செய்துள்ளது. இப்படியொரு சட்டம் வ்ருவது இதுதான் முதல் முறை.

குறுஞ்செய்தியை சாலைகளில் கடக்கும்போது தடை செய்த உலகின் முதல் நகரம் ஹொனோலுலு

பட மூலாதாரம், Getty Images

இந்த மசோதா ஜூலை மாதம் சட்டமாக நிறைவேறியது. கடந்த செவ்வாயன்று அமலுக்கு வந்தது. இது கவனக்குறைவால் சாலையில் நாடாகும் விபத்துகளை தவிர்ப்பதற்கான ஒரு முன்மாதிரி முயற்சி ஆகும்.

முதன் முறை சட்டத்தை மீறுபவர்களிடம் 15 டாலர் முதல் 35 டாலர் வரை அபராதம் வசூலிக்கப்படும். திரும்ப தவறு செய்பவர்களுக்கு 99 டாலர் வரை அபராதம் வசூலிக்கப்படும்.

அவசர சேவை இணைப்புகள் இந்த தடையில் உள்ளடங்காது.

காணொளிக் குறிப்பு, நவீன தொழில்நுட்பங்களால் அசத்தும் சென்னை ஆட்டோ ஓட்டுநர் அண்ணாதுரை

இந்தச் சட்டத்தின்படி நடந்து செல்லும் நபர்கள் சாலைகளை அல்லது நெடுஞ்சாலை கடக்கும்போது, நடந்து செல்லும் நபர்கள் சாலைகளை அல்லது நெடுஞ்சாலை கடக்கும்போது எவ்வித மின்னணு சாதனங்களையும் பயன்படுத்தக் கூடாது.

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு அமைப்பு இந்த "கவனமின்றி நடப்பதை" கடந்த 2015ம் ஆண்டு, மனிதர்களால் செயற்கையாக காயமேற்படுத்தும் விபத்துகள் பட்டியலில் சேர்த்தது. அதே ஆண்டு ஜர்னல் ஆப் சேப்டி ஸ்டடீஸ் என்னும் ஆய்விதழில் வருடத்திற்கு நூற்றுக்கணக்கான அமெரிக்க பாதசாரிகள் தங்களின் கைபேசியை பயன்படுத்தி கொண்டு நடந்தபோது கவனக்குறைப்பட்டால் விபத்தில் சிக்கினர்.

மற்ற நாடுகள் "ஸ்மார்ட்போன்ஸ் ஸோம்பீஸ்" என்று அழைக்கப்படும் கைபேசிக்கு அடிமையானவர்களை கையாள்வதற்கு பல்வேறு விதமான தொழில்நுட்பங்களை பயன்படுத்தின. ஒரு குறிப்பிட்ட இடத்தை ஸ்கேன் செய்வதன் மூலம் அங்கு ஏற்படப்போகும் போக்குவரத்து நெரிசலை தெரிவிக்கும் செயலி உள்ளிட்ட எச்சரிக்கை நடவடிக்கைகள் இதற்கு முன்பு எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்