கலிஃபோர்னியா காட்டுத் தீயின் கொடூரத்தின் செயற்கைக்கோள் படங்கள்

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் ஏற்பட்டுள்ள மோசமான காட்டுத் தீ, 3,500க்கு மேற்பட்ட கட்டடங்களை அழித்துள்ளது. மேலும் 25,000த்துக்கும் மேற்பட்ட மக்கள் தாங்கள் வாழ்ந்த வீடுகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

40 பேரை பலி வாங்கியதுடன் 170,000 ஏக்கர் நிலத்தை தீக்கிரையாக்கிய காட்டுத் தீயுடன், தீயணைப்புப் படையினர் இன்னும் போராடி வருகின்றனர். சாண்டா ரோசா நகரத்தின் பல பகுதிகள் தீயில் பாதிக்கப்பட்டிருப்பதை செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன.

கலிஃபோர்னியா காட்டுத் தீ

சாண்டா ரோசா

கலிஃபோர்னியா காட்டுத் தீ

பட மூலாதாரம், Getty Images

சாண்டா ரோசா நகரத்தின் சில பகுதியில் உள்ள குடியிருப்புகள் சாம்பல் குவியல்களாக உள்ளன.

கலிஃபோர்னியா காட்டுத் தீ

நூற்றுக்கணக்கான மக்கள் இன்னும் காணாமல் போய் உள்ளனர். தீ பரவிவதை தடுக்க ஆயிரக்கணக்காண தீயணைப்புப் படையினர் போராடி வருகின்றனர்.

கலிஃபோர்னியா காட்டுத் தீ

பட மூலாதாரம், Getty Images

நாபா கவுண்டி

நாபா கவுண்டி ஒயின் பண்ணையின் மலைகளிலும் காட்டுத் தீ கொழுந்து விட்டு எரிந்தது. தோட்டங்களும், விவசாய நிலங்களும் எரிந்து போயின.

கலிஃபோர்னியா காட்டுத் தீ

இதற்கு முன்பு அக்டோபர் 1933-ம் ஆண்டு கலிஃபோர்னியாவில் கொடூரமான தீ ஏற்பட்டது. லாஸ் ஏஞ்சல்ஸ் க்ரிஃபித் பார்க்கில் ஏற்பட்ட இத்தீயில் 29 பேர் கொல்லப்பட்டனர்.

கலிஃபோர்னியா காட்டுத் தீ

பட மூலாதாரம், Getty Images

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்