அட்லாண்டிக் கடல் மேலே பறக்கும்போது ஏர் ஃபிரான்ஸ் விமானம் செயலிழந்தது எப்படி?

பழுதடைந்த விமானம்

பட மூலாதாரம், David Rehmar

படக்குறிப்பு, விமானத்தின் ஜன்னல்களின் மத்தியில் இருந்து சேதமடைந்த இன்ஜினை பயணிகளால் பார்க்க முடிந்தது.

பாரிஸில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸை நோக்கி அட்லாண்டிக் கடல் மீது பறந்து கொண்டிருந்த ஏர் ஃபிரான்ஸ் விமானத்தினுடைய இயந்திரத்தின் ஒரு பகுதி திடீரென செயலிழந்ததால் உடனடியாக திசை திருப்பப்பட்டது.

சனிக்கிழமையன்று , கிரீன்லாந்து வான்பகுதியியின் மீது பறந்துக்கொண்டிருந்த ஏர்பஸ் ஏ 380 ரக மற்றும் AF66 தட எண் கொண்ட விமானத்தின் நான்கு இன்ஜின்களில் ஒன்று பழுதடைந்தது.

இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும், விமானம் தரையிறங்கிய பின்னர் பல மணி நேரம் பயணிகள் விமானத்திற்குள் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

அவ்விமானம் 496 பயணிகள் மற்றும் 24 விமான பணியாட்களை சுமந்து சென்றதென்று ஏர் ஃபிரான்ஸ் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

இந்த விமானத்தில் பயணம் செய்தவரும் மற்றும் முன்னாள் விமானப் பொறியாளருமான டேவிட் ரெஹ்மர் என்பவர் இதுகுறித்து பிபிசியிடம் பேசும்போது, அவரின் கணிப்புகளின்படி இதற்கு காரணமாக விமானத்தின் காற்றாடியில் ஏற்பட்ட பழுதாக இருந்திருக்கலாம் என்று கூறுகிறார்.

அதிகமாக சத்தத்திற்கு பிறகு உடனடியாக அசைந்த விமானத்தின் நிலையானது பயணிகளுக்கிடையே அச்சத்தை உண்டாக்கியதாக அவர் மேலும் தெரிவித்தார்.

"ஒரு 'பலத்த' சத்தம் கேட்டது, மற்றும் அது ஏற்படுத்திய அதிர்வு அது என்ஜின் தோல்வி என்று யோசிக்க வைத்தது," என்று அவர் கூறினார்.

பழுதடைந்த விமானம்

பட மூலாதாரம், David Rehmar

படக்குறிப்பு, இவ்விமானம் எந்தவிதமான அபாயகரமான சேதமும் இல்லாமல் பாதுகாப்பாக தரையிறங்கியது

ரஹ்மார் ஒரு சில நிமிடங்களுக்கு, "நாங்கள் கீழே போகப் போகிறோம்" என்று நினைத்தாக கூறுகிறார்.

30 விநாடிக்குள் விமானம் நிலையாக இருக்கும்போது விமானம் பறக்க முடியாமல் போயிருக்கலாம் என்று அவர் கவலை தெரிவிக்கிறார். விமானிகள் விரைந்து செயல்பட்டு பாதிக்கப்பட்ட என்ஜினை நிறுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.

கிழக்கு கனடாவின் லாப்ரடரில் உள்ள கோஸ் பே விமானநிலையத்தை அடைவதற்கு முன்னர் விமானமானது வெறும் மூன்று இன்ஜின்களுடன் ஒரு மணி நேரம் பறந்து சென்றது.

பயணிகள் எடுத்த புகைப்படங்களானது விமானத்தின் இறக்கையின் உலோக மேற்பகுதி அல்லது இன்ஜினின் மேற்பகுதி, முற்றிலும் சேதமடைந்ததையும் மற்றும் இறக்கையின் மேற்பரப்பில் ஏற்பட்ட சிறிது சேதம் ஆகியவற்றையும் காட்டியது.

பிற செய்திகள்:

காணொளிக் குறிப்பு, வன்முறைக்கும் வங்கக் கடலுக்கும் இடையே தத்தளிக்கும் ரோஹிஞ்சாக்களின் வாழ்க்கை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்