காபூல்: அமெரிக்கா நடத்திய வான் வழி தாக்குதலில் பலர் உயிரிழப்பு?

பட மூலாதாரம், EPA
ஆப்கான் தலைநகர் காபூலில் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா நடத்திய வான் வழி தாக்குதலில் செலுத்தப்பட்ட ஏவுகணையொன்று சரியாகச் செயல்படாத காரணத்தால் சில குடிமக்கள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆப்கானுக்கு அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ஜேம்ஸ் மாட்டிஸ் வருகை புரிந்துள்ள நிலையில், காபூல் விமான நிலையத்தை ராக்கெட்டுகள் மூலம் தாக்கிய கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக போராடும் ஆப்கான் துருப்புகளுக்கு ஆதரவாக அமெரிக்காவின் வான் வழி தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த சம்பவத்தில் அவ்வளவு பேர் கொல்லப்பட்டனர் அல்லது காயமடைந்தனர் என்பது தெளிவாக தெரியவில்லை.
தாங்கள் ஆப்கானிஸ்தானுக்கு கூடுதலாக 3000 துருப்புகள் அனுப்பப் போவதாக அண்மையில் அமெரிக்கா உறுதி செய்தது.

பட மூலாதாரம், EPA
ஆப்கானில் தற்போது உள்ள ரிசலுயூட் சப்போர்ட் என்றழைக்கப்படும் நேட்டோ பணிக்குழு வெளியிட்ட அறிக்கையில், ''துரதிர்ஷ்டவசமாக வான் வழி தாக்குதலில் செலுத்தப்பட்ட ஏவுகணையொன்று சரியாகச் செயல்படாததால் ஏரளாமான உயிரிழப்புகள் ஏற்பட்டது'' என்று தெரிவித்திட்டுள்ளது.
முன்னதாக, ஜேம்ஸ் மேட்டிஸ் வந்த விமானத்தை தாங்கள் குறிவைத்ததாக தாலிபன் மற்றும் இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஐ.எஸ். அமைப்பு ஆகிய இரு தரப்பும் காபூல் விமான நிலையத்தில் நடந்த ராக்கெட் தாக்குதலுக்கு உரிமை கோரின என்பது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













