You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டிரம்பின் பயணத்தடை பட்டியலில் வடகொரியா உள்பட மேலும் 3 நாடுகள்
வட கொரியா, வெனிசுவேலா மற்றும் சாட் ஆகிய நாடுகளை சேர்க்கும் வகையில் தனது சர்ச்சைக்குரிய பயணத்தடையை அமெரிக்கா விரிவுபடுத்தியுள்ளது.
வெளிநாட்டு அரசாங்கங்கள் பகிர்ந்து கொண்ட தகவலை மீளாய்வு செய்ததையடுத்து இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
நேற்று (ஞாயிறு) இரவு அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக இந்த உத்தரவைப் பிறப்பித்தார். அறிவித்தார்.
''அமெரிக்காவை பாதுகாப்பாக வைப்பதே என்னுடைய முதல் முன்னுரிமை. நம்மால் பாதுகாப்புடன் ஆராய முடியாதவர்களை நம்நாட்டிற்கு அனுமதிக்க முடியாது,''
வெனிசுவேலா மீதான அமெரிக்காவின் கட்டுப்பாடானது அந்நாட்டு அரசாங்க அதிகாரிகளுக்கும் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
டிரம்ப் ஏற்கனவே விதித்திருந்த பயணத்தடையில் இரான், லிபியா, சிரியா, ஏமன் மற்றும் சோமாலியா ஆகிய ஐந்து நாடுகள் இடம்பெற்றிருந்த நிலையில், தற்போது கூடுதலாக மூன்று புதிய நாடுகள் இணைந்துள்ளன.
அதிபர் டிரம்பின் முக்கிய பயணத்தடை முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் 6 நாடுகளை பாதித்ததால் மிகவும் சர்ச்சைக்குள்ளானது. மேலும், இத்தடை முஸ்லிம்களுக்கு எதிரான தடை என்று பரவலாக கூறப்பட்டது.
இந்த தடை காரணமாக, பயணத்தடை சட்டம் பல விதமான சட்ட சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. மேலும், பெரியளவிலான போராட்டங்களும் ஆங்காங்கே நடைபெற்றன.
ஜூலை மாதம் இச்சட்டத்தை பகுதியளவு அமல்படுத்த அனுமதித்த அமெரிக்கா உச்ச நீதிமன்றம், வருகின்ற அக்டோபர் மாதம் பயணத்தடை சட்டம் குறித்து முடிவெடுக்க உள்ளது.
''பயணத்தடையில் புதிய நாடுகளின் சேர்க்கை, டிரம்ப் நிர்வாகத்தின் ஆணை இன்னும் முஸ்லிம்களுக்கு எதிரான தடை என்னும் உண்மையை மறைக்கப்போவதில்லை'' என்று அமெரிக்க சிவில் உரிமை அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.
அதிபரின் இந்த புதிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு சட்ட சவால்களை பாதிக்கும் பல முக்கிய விஷயங்களை மாற்றப்போகிறது என்பது தெளிவாக தெரியவில்லை.
தற்போது, பயணத்தடை பட்டியலில் வட கொரியா மற்றும் வெனிசுவேலாவை இணைத்ததன் மூலம் பட்டியலில் உள்ள நாடுகள் அனைத்தும் முஸ்லிம் பெரும்பான்மை நாடுகள் என்று கூறமுடியாது.
பிற செய்திகள்:
- ஜெர்மனி : 4-ஆவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட மெர்கல்; முதல்முறையாக வலதுசாரி கட்சி வெற்றி
- சமூக ஊடகங்களில் ரோஹிஞ்சா செயற்பாட்டாளர்களின் பதிவுகள் நீக்கப்படுவது ஏன்?
- போன் அழைப்புகளை அலட்சியம் செய்த மகன்; ஆப் மூலம் தீர்வு கண்ட தந்தை
- இந்தியாவை சிறுமைப்படுத்த ஐ.நா. சபையில் தவறான புகைப்படத்தைக் காட்டிய பாகிஸ்தான் தூதர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- ட்விட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்