ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 30 ரூபாயாக இருக்கும்போது 70 ரூபாய்க்கு விற்பது ஏன்?

இந்தியாவில் பெட்ரோல் விலை பற்றிய விவாதங்களில் அனல் பறக்கிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரிக்காத நிலையில் இந்தியாவில் மட்டும் விலை தொடர்ந்து அதிகரிப்பது ஏன்?
இந்தியாவில் பெட்ரோலின் விலை அதிகமாக இருப்பது தொடர்பாக பிரதமரும், மத்திய அரசும் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளனர்.
மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், பெட்ரோல் விலை உயர்வு பற்றிய சமாதானங்களை சொல்ல முற்பட்டாலும், எதிர்கட்சிகளின் தாக்குதலையும் மக்களின் ஏமாற்றத்தையும் மத்திய அரசு எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
கட்டுப்பாட்டில் உள்ளது கச்சா எண்ணெய் விலை

பட மூலாதாரம், Indian Oil Corporation
உலக அளவில் கச்சா எண்ணெய் விலை கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில் மத்திய அரசின் வரி விதிப்புதான், பெட்ரோல் விலை அதிகரிப்புக்கு காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
செப்டம்பர் 15-ஆம் தேதி நிலவரத்தின்படி, சர்வதேச சந்தையில் இந்தியா வாங்கும் கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 54.58 டாலர் மட்டுமே.
கச்சா எண்ணெயின் விலை குறைவாக இருக்கும்போது, எரிபொருளாக பயன்படுத்தப்படும் பெட்ரோல், டீசல் விலைகள் மட்டும் ஏன் தொடர்ந்து அதிகரிக்கப்படுகிறது? இந்த கேள்விக்கான பதில் மிகவும் எளிமையானது.
கட்டுக்கு அடங்காமல் உயரும் பெட்ரோல் விலை

பட மூலாதாரம், Indian Oil
இந்தியா வந்து சேரும் கச்சா எண்ணெயின் விலையும் அதிகமில்லை.
செப்டம்பர் 19ஆம் தேதி நிலவரத்தை எடுத்துக்கொண்டால், தினசரி அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யும் முறையின்படி, இந்தியா வந்து சேரும் ஒரு லிட்டர் பெட்ரோலின் அடக்கவிலை 27.74 ரூபாய் மட்டுமே.
இறக்குமதி விலை, சர்வதேச போக்குவரத்து செலவுகள் மற்றும் கட்டணங்களும் சேர்த்தே இந்த விலை. இத்துடன் மார்க்கெட்டிங் செலவுகள், லாபம், வரிகள் மற்றும் பிற கட்டணங்களை சேர்த்த பிறகு பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு அனுப்பப்படுகிறது.
30 ரூபாயிலிருந்து 70 ரூபாய் வரையிலான பயணம்

பட மூலாதாரம், Indian Oil

பட மூலாதாரம், Indian Oil
செப்டம்பர் 19 தேதி நிலவரப்படி மேற்கூறிய கட்டணங்கள் மட்டும் 2.74 ரூபாய். பெட்ரோல் விலையுடன் இதை சேர்த்தால் ஒரு லிட்டர் பெட்ரோல் 30.48 ரூபாயாக அதிகரிக்கிறது.
பெட்ரோல் நிலையத்திற்கு இவ்வளவு குறைவான விலையில் கொடுக்கப்படும் பெட்ரோலின் விலை சாதாரண மனிதனை அடையும்போது ஏன் அதிகமாகிறது? சில்லறை விற்பனை செய்பவர்கள் கொள்ளை லாபம் ஈட்டுகிறார்களா என்ற கேள்வி எழுவது இயல்பே.
ஆனால் 30.48 ரூபாயாக இருக்கும் பெட்ரோல் நுகர்வோரை சென்றடையும் பயணத்தில்தான், உண்மையான வரி விளையாட்டு தொடங்குகிறது.
கலால் மற்றும் மதிப்பு கூட்டு வரி
டீலர்களுக்கு கிடைக்கும் விலை மற்றும் விற்பனை விலைக்கும் இடையிலான வித்தியாசத்திற்கு காரணம் கலால் மற்றும் மதிப்பு கூட்டு வரியே.
(iocl.comஇல் குறிப்பிட்டுள்ளபடி, 2017 செப்டம்பர் 19ஆம் தேதியன்று டெல்லி விலை)
செப்டம்பர் 19 அன்று டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 70 ரூபாய் 52 காசுகள்.
ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 21 ரூபாய் 48 காசுகள் கலால் வரியை அடக்க விலையான 30.48 ரூபாயுடன் சேர்க்கவும். இதில் டீலர் கமிஷனாக ஒரு லிட்டருக்கு 3.57 ரூபாயை சேர்க்க வேண்டும். பிறகு14.99 ரூபாய் மதிப்பு கூட்டு வரியை (டெல்லியில் 27%) கூட்டினால் 70 ரூபாய் 52 காசுகள்.
டீசலின் கதையும் இதுவே

பட மூலாதாரம், AFP
அரசின் கருவூலத்தை நிரப்பும் வரிகளால் பொதுமக்களின் பட்ஜெட் எகிறுகிறது. டீசலின் கதையும் இதுவே.
ஒரு லிட்டர் டீசலின் இறக்குமதி விலை 27.98 ரூபாய். இதில் 2.35 ரூபாய் கூடுதல் கட்டணங்களை சேர்த்து 30.33 ரூபாய் என்ற விலையில் டீலரை சென்றடைகிறது டீசல். பிறகு கலால் மற்றும் மதிப்பு கூட்டு வரியால் விற்பனை விலை லிட்டர் ஒன்றுக்கு 58.85 ரூபாயாக அதிகரிக்கிறது.
மக்களுக்கு நிவாரணம் கிடைக்குமா?
(2017 செப்டம்பர் 11ஆம் தேதி நிலவரப்படி, மூலம் க்ளோபல் பெட்ரோல் பிரைசஸ்*2017 செப்டம்பர் 15ஆம் தேதி விலை நிலவரம்)
ஒரு லிட்டர் டீசலுக்கு கலால் வரி 17 ரூபாய் 33 காசுகள், டீலர் கமிஷன் லிட்டர் ஒன்றுக்கு 2.50 ரூபாய். 16.75% மதிப்பு கூட்டு வரி, இத்துடன் லிட்டர் ஒன்றுக்கு மாசு வரியாக 25 காசுகளையும் சேர்த்தால் ஒரு லிட்டர் டீசலின் விலை 58.85 ரூபாயாக உயர்கிறது.
அண்மைக் காலமாக பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயிக்கின்றன, இதில் மத்திய அரசின் தலையீடு இல்லை என்று அரசு கூறுகிறது.
இந்த சூழ்நிலையில் பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பில் இருந்து மக்களுக்கு நிவாரணம் கிடைக்க வேண்டும் என்றால், வரி விகிதங்களில் அரசு மாற்றங்களை ஏற்படுத்துவதே மக்களுக்கு ஆறுதலான நிவாரணமாக இருக்கும்.
பெட்ரோல், டீசல் கார்கள் விடைபெறும் காலம் வருகிறதா?
பிற செய்திகள்
- போர் விமானம் வெடித்து பாகிஸ்தானில் விழுந்த இந்திய விமானப்படை அதிகாரி
- ரோஹிஞ்சா பிரச்சனை : 'சர்வதேச கண்காணிப்பு குறித்து அச்சமில்லை' - ஆங் சான் சூச்சி
- பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் ஆஃப்கன் பெண்களின் புகைப்படங்கள்
- திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்ன?
- குழந்தையும் வேண்டாம், 100 கோடி சொத்தும் வேண்டாம்!
- இலங்கை : டெங்குவால் உயிரிழந்தோரில் 68% பேர் பெண்கள்
- அமேசான் அற்புதங்களை கொண்ட பிரேசிலின் பிரம்மாண்டம்!
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













