கண்ணாடி பரப்புகள் கொண்ட நவீன கட்டடங்கள் வௌவால்களுக்கு ஆபத்தா?

பெரும் கண்ணாடிப் பரப்புகள் அல்லது கண்ணாடியாலான மேற்பரப்புகள் கொண்ட நவீன கட்டடங்கள் வௌவால்களுக்கு ஆபத்தானவையாக இருக்கலாம் என்று புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது.

வௌவால்

பட மூலாதாரம், GREG WOOD/AFP/Getty Images

பல இறந்த அல்லது காயமடைந்த வௌவால்கள் கட்டடங்களுக்கு அருகே காணப்பட்டதை அடுத்து இந்த ஆபத்துகள் குறித்து விஞ்ஞானிகள் ஆராயத் தொடங்கினர்.

வௌவால்களின் மீது இது போன்ற கட்டடங்களின் தாக்கம் குறித்து கணிக்க மேலும் கண்காணிப்பு தேவைப்படுகின்றது என்று ஜெர்மனியில் உள்ள மேக் ப்ளாங்க் பறவை ஆராய்ச்சி கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் கூறினர்.

மரத்தில் தொங்கும் வௌவால்

பட மூலாதாரம், Ian Waldie/Getty Images

தங்களைச் சுற்றியுள்ள சூழ்நிலையைப் பற்றிய ஒரு ஒலி வடிவ வரைபடத்தை உருவாக்க வௌவால்கள் குரலெழுப்பி, அக்குரலின் எதிரொலிகளை கவனிக்கின்றன.

கண்ணாடி ஜன்னல்கள் அல்லது கண்ணாடிகளால் உருவாக்கப்பட்ட கட்டடங்கள், அவை ஒலியைப் பிரதிபலிக்கும் விதத்தால், வௌவால்களுக்கு ஒரு பார்க்கமுடியாத இடத்தை உருவாக்குகின்றன என்று கருதப்படுகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :