தம் ரத்த சோதனை முடிவுகளை ஆடைகளில் அச்சிடும் வடிவமைப்பாளர்

diabetic

பட மூலாதாரம், Melanie hyams

நீங்கள் ஒரு நீரிழிவு நோயாளியாக இருந்தால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சோதனை செய்வது என்பது உங்கள் வாழ்வின் அங்கமாக மாறிவிடும். ஆனால், நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ள இந்த ஆடை வடிவமைப்பாளரோ அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளார். தான் வடிவமைக்கும் ஆடைகளில் அவரின் ரத்த மாதிரியின் முடிவுகளை அச்சிட்டு ஆடைகளை வடிவமைக்கிறார்.

போப்பி நாஷ், தான் ஆறு வயதாக இருக்கும் போதே டைப் 1 நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக அவரது உடல் இன்சுலினை உற்பத்தி செய்யாது.

"இது பயங்கரமானது மற்றும் அச்சம் நிறைந்தது" என்று அவர் கூறுகிறார். "மருத்துவமனையில் எனது தாய் அழுது கொண்டிருந்த போது, ஏதோ தவறு நடந்துள்ளதை என்னால் உணர முடிந்தது.

மருத்துவமனையில் இருந்து நாஷ் வெளியேறிய போது, அன்றாட வாழ்க்கையில் ஊசிகளை பயன்படுத்துவது மற்றும் ஒரே நாளில் பல முறை இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அளவிடுவது உள்ளிட்ட கட்டுப்பாடுகளுடன் வீட்டிற்கு வந்தார்.

diabetic

பட மூலாதாரம், Melanie hyams

ஒரு முறை நாஷ் தவறுதலாக இரண்டு மடங்கு இன்சுலினை தனக்குத் தானே செலுத்திவிட்டார். இதனால், தன்னுடைய 18 வயதில் அவர் மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அதன்பின்னர் அவர் ஸ்காட்லாந்தில் உள்ள க்ளாஸ்கோவ் கல்லூரியில் இணைந்து டெக்ஸ்டைல் துறையில் துணியில் அச்சிடுவது குறித்து கற்றுக் கொண்டார். அவரது கல்லூரியில் அவருக்கு செயல்முறை விளக்க திட்டத்திற்கான பணி ஒன்று கொடுக்கப்பட்டது.

"நான் மிகவும் மன அழுத்தத்திற்கு உள்ளானேன். நீரிழிவு நோயால் மிகவும் அவதிக்குள்ளானேன்" என்று அவர் கூறினார். " என்னுடைய நீரிழிவு நோயினால் எனக்கு அளிக்கப்பட்ட வேலையை என்னால் செய்ய முடியவில்லை, பின்னர் அந்த சூழ்நிலையை எனக்கு தகுந்தவாறு நான் மாற்றிக் கொண்டேன்".

diabetic

பட மூலாதாரம், Melanie hyams

இதனையடுத்து நாஷ் தனது ரத்தத்தில் உள்ள சர்க்கைரையின் அளவை தரவுகளாக சேகரித்து நாள்தோறும் குறிக்க தொடங்கினார்.

அந்த தரவுகளை எடுத்து சில நேரங்களில் அதை பெரிதாக்கி அதன் மீது வண்ணங்கள் தீட்டி துணிகளில் அச்சிட துவங்கினார். உடுத்தக் கூடிய இந்த கலைப்படைபுகள் தனது ரத்தத்தால் நெய்யப்பட்ட ஆடைகளைப் போல் அவர உணர ஆரம்பித்தார்.

"இது எனக்கு மகிழ்ச்சியை உண்டாக்கியது, ஏனெனில் நான் ஏமாற்றுகிறேன் என்று உணர்ந்தாலும் அவை அனைத்தும் உண்மையான எண்கள் என்பதால் அச்சமாகவும் இருக்கும்" என்றும் தெரிவித்துள்ளார்.

diabetic

பட மூலாதாரம், Poppy nash

இருப்பினும் நாஷ் அவரது பணியில் கவனம் செலுத்த தொடங்கினார், சில நேரங்களில் எதிர்மறை எண்ணங்கள் கூட உருவாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தொடர்ச்சியாக பணியில் கவனம் செலுத்தினாலும் நாள்தோறும் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சோதனை செய்வதில் இருந்து அவர் தவறுவதில்லை.

சர்க்கரை அளவீடுகளின் தரவுகளை தொடர்ச்சியாக கண்காணித்து எழுதிக் கொண்டேயிருப்பதும் நல்ல சிகிச்சை முறையாக உள்ளது என்றும் அவர் கூறுகிறார்.

ஐரோப்பாவை பொறுத்தவரை ரத்தத்தில் சர்க்கரையின் அளவு ஒவ்வொரு நபருக்கும் வேறுபாடாக இருந்தாலும் நான்கிலிருந்து ஐந்திற்குள் இந்த அளவீடுகள் இருக்கும். ஆனால், நாஷ்-ற்கு சில நேரங்களில் 18 அளவு வரை செல்கிறது. அவர் அச்சிட்டுள்ளவையில் இருந்தே இதை தெரிந்து கொள்ள முடியும்.

diabetic

பட மூலாதாரம், Poppy nash

தற்போது நாஷ் ஆடை வடிவமைப்பிலும் அவற்றை காட்சிப்படுத்தும் வேலைகளிலும் தனது முழுக்கவனத்தையும் செலுத்தியுள்ளார்.

"மக்கள் இதை உடுத்தினால் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன்" என்றும் "நீரிழிவு நோய் குறித்தும் மக்களும் தெரிந்து கொள்வார்கள்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

"நான் எப்போதும் எனது நோய் குறித்து சிந்தித்துக் கொண்டேயிருப்பேன், மக்களிடம் அது குறித்து நான் உரையாடும் போது சற்று ஆறுதலாக உணர்வேன்"

நாஷ் தொடர்ச்சியாக சர்க்கரையின் அளவை கண்காணிப்பதின் மூலம் புதிய படைப்புகளை அவரால் உருவாக்க முடிகிறது.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :