ஆஸ்திரேலிய பூங்காவில் பிறந்த அரிய வகை வெள்ளை கோலா

ஆஸ்திரேலிய வனயிரியல் பூங்காவில் அண்மையில் பிறந்த அரிய நிற கோலா பெண் குட்டி ஒன்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஆஸ்திரேலிய பூங்காவில் அரிய வகை கோலா

பட மூலாதாரம், TOURISM AUSTRALIA/AUSTRALIA ZOO

அதன் வெள்ளைநிறம் நிறமிக் குறைபாடால் ஏற்படவில்லை. தனது அம்மாவிடமிருந்து வந்த மரபணுவே அதற்கு காரணம் என ஆஸ்திரிலேயாவின் குயின்ஸ்லாண்டில் உள்ள இந்த பூங்கா தெரிவிக்கிறது.

இம்மாதிரியான கோலா வனத்தில் வாழ்ந்தால் அது உயிர்பிழைப்பது கடினம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

கால்நடை மருத்துவ அறிவியல் இதை "சில்வெரிங் ஜீன்" என்று அழைக்கிறது. வெள்ளையாகவோ வெளிர் நிறத்திலோ இருக்கும் இவற்றின் முடி குழந்தையின் பால் பற்களைப் போல உதிர்ந்து நாளடைவில் முதிர்ந்த விலங்கிற்கு உரிய முடி முளைவித்துவிடும் என்கிறார் பூங்காவின் வன உயிரி மருத்துவனை இயக்குநர் ரோசி பூத்.

வனத்தில் இருக்கும் விலங்குகளை கவனித்துவரும் தான் இருபது வருடங்களில் இது போன்ற வெள்ளை கோலாவை பார்த்ததில்லை என்று குயின்லாண்ட் மத்திய பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் நிபுணர் அலிஸ்டர் மெல்சர் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய பூங்காவில் அரிய வகை கோலா

பட மூலாதாரம், TOURISM AUSTRALIA/AUSTRALIA ZOO

கோலாக்களை கழுகுகளும், ஆந்தைகளும் தின்னும் ஆபத்து உள்ளதாக அவர் தெரிவிக்கிறார். இம்மாதிரியான வெள்ளை நிற விலங்கு தனது இருப்பிடத்தை எளிதாக மறைத்து கொள்ள முடியாது.

இந்த கோலாவிற்கான பெயரை பரிந்துரைக்கலாம் என முகநூலில் இடப்பட்ட பதிவு ஆயிரத்திற்கும் மேலாக பகிரப்பட்டுள்ளது.

அதில் இதுவரை ஸ்னோஃபிளேக், டைமண்ட், பியல் மற்றும் ஜெந்தலால்டி(வெள்ளை முடி) என்னும் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :