2017 களாப்பகஸ் புகைப்படப் போட்டி: நடுவர்களை வியக்க வைத்த புகைப்படங்கள் எவை?

பசிஃபிக் கடலில் இருக்கும் களாப்பகஸ் தீவில் உள்ள வன விலங்குகள் மற்றும் அதன் இயற்கைக் காட்சிகளை படம்பிடிக்கும், `2017 களாப்பகஸ் பாதுகாப்பு அறக்கட்டளை புகைப்படப் போட்டி` நடைபெற்றுள்ளது.

விலங்கின் செயல்பாடு, தாவரவியல், நிலப்பரப்பு, தீவில் மனிதர்கள், விலங்கின் உருவப்படம் எனப் பல தலைப்புகளில் புகைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.

இந்தப் போட்டியில் வெற்றி பெற்றவர்களின் புகைப்படங்கள் இங்கே.

2017 கலபகோஸ் தீவு புகைப்படப் போட்டி: நடுவர்களை வியக்க வைத்த புகைப்படங்கள்

பட மூலாதாரம், SHERI VANDERMOLEN/ GALAPAGOS CONSERVATION TRUST

படக்குறிப்பு, சுவூத் ப்ளாசா தீவில் உள்ள இந்த உடும்பின் புகைப்படத்தினை ஷேரி வந்தர்மொலென் எடுத்துள்ளார். இந்த உடும்பின் குணாதியசத்தை சரியான நேரத்தில் படம் பிடித்துள்ளார் புகைப்பட கலைஞர். விலங்கின் உருவப்படம் என்ற தலைப்பின் கீழ் இப்புகைப்படம் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது
2017 கலபகோஸ் தீவு புகைப்படப் போட்டி: நடுவர்களை வியக்க வைத்த புகைப்படங்கள்

பட மூலாதாரம், McKenna Paulley/ Galapagos Conservation Trust

படக்குறிப்பு, மெக்கெனா பால்லே எடுத்த இந்த புகைப்படம் போட்டியில் முதலிடத்தைப் பெற்றுள்ளது. ஸ்ட்ராம் பீட்ரல் என்ற கடற்பறவை தண்ணீரில் நடந்தபடியே தனது இரையைத் தேடுகிறது. புகைப்படத்தில் இடம்பெற்றுள்ள விவரங்கள் நடுவர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
2017 கலபகோஸ் தீவு புகைப்படப் போட்டி: நடுவர்களை வியக்க வைத்த புகைப்படங்கள்

பட மூலாதாரம், Carlos Cuenca Solana / GCT

படக்குறிப்பு, கார்லோஸ் குன்கா சோலானா எடுத்த `கல்` என்ற கடல் பறவையின் புகைப்படம், இரண்டாம் இடத்தைப் பெற்றதுடன், விலங்கின் உருவப்படம் என்ற தலைப்பின் கீழ் முதலிடத்தைப் பெற்றது.
2017 கலபகோஸ் தீவு புகைப்படப் போட்டி: நடுவர்களை வியக்க வைத்த புகைப்படங்கள்

பட மூலாதாரம், Andres Eduardo Paredes Buenaño/ GCT

படக்குறிப்பு, சான் கிரிஸ்டோபல் தீவின் கரையில் இருக்கும் செம்பயர் ஏஞ்சல்டோ VI என்ற சேதமடைந்த கப்பலின் புகைப்படம் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளது. புகைப்படக்கலைஞர் ஆண்ட்ரெஸ் பியூனானோ எடுத்த இப்புகைப்படம் தீவில் மனிதர்கள் என்ற தலைப்பின் கீழ் முதலிடத்தை பெற்றுது.
2017 கலபகோஸ் தீவு புகைப்படப் போட்டி: நடுவர்களை வியக்க வைத்த புகைப்படங்கள்

பட மூலாதாரம், Ivan Dario Vasquezala/ GCT

படக்குறிப்பு, ஹெரான் என்ற கொக்கு, கடல் ஆமையைப் பிடிக்கும் இப்புகைப்படத்தினை இவான் டாரியோ எடுத்துள்ளார். 'விலங்கின் செயல்பாடு' தலைப்பின் கீழ் இப்புகைப்படம் முதலிடத்தைப் பெற்றுள்ளது.
2017 கலபகோஸ் தீவு புகைப்படப் போட்டி: நடுவர்களை வியக்க வைத்த புகைப்படங்கள்

பட மூலாதாரம், James Robins/ Galapagos Conservation Trust

படக்குறிப்பு, கலாபாகோஸ் மாக்கிங்பேர்ட் என்ற பறவை தனது குஞ்சுக்கு உணவளிக்கும் இப்புகைப்படம் விலங்கின் நடத்தை தலைப்பின் கீழ் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது.
2017 கலபகோஸ் தீவு புகைப்படப் போட்டி: நடுவர்களை வியக்க வைத்த புகைப்படங்கள்

பட மூலாதாரம், Eric Williams/ Galapagos Conservation Trust

படக்குறிப்பு, கள்ளிச்செடியின் தண்டில் மாலைநேர சூரிய ஒளி படர்ந்திருக்க, இதனை வலுவான, எளியக் கோணத்தில் எரிக் வில்லியம்ஸ் புகைப்படம் எடுத்துள்ளார். தாவரவியல் தலைப்பின் கீழ் இப்புகைப்படம் முதலிடம் பெற்றுள்ளது.
2017 கலபகோஸ் தீவு புகைப்படப் போட்டி: நடுவர்களை வியக்க வைத்த புகைப்படங்கள்

பட மூலாதாரம், Eric Williams/ Galapagos Conservation Trust

படக்குறிப்பு, செர்ரோ ப்ரூஜோ கடற்கரை கடலில் உள்ள கிக்கர் பாறையினை அசாதாரண நேரத்தில் எரிக் வில்லியம்ஸ் படம் பிடித்துள்ளார். நிலப்பரப்பு தலைப்பின் இப்புகைப்படம் முதலிடத்தைப் பெற்றது.
2017 கலபகோஸ் தீவு புகைப்படப் போட்டி: நடுவர்களை வியக்க வைத்த புகைப்படங்கள்

பட மூலாதாரம், Charlotte Brett/ Galapagos Conservation Trust

படக்குறிப்பு, மாஸ்க்யூரா தீவின் கடற்ரையில், ஒரு அமைதியான காலை நேரத்தில் பாறைகள் மீது நண்டுகள் ஊறும் புகைப்படம் 'நிலப்பரப்பு' என்ற தலைப்பின் இரண்டாம் இடத்தைப் பெற்றது.
2017 கலபகோஸ் தீவு புகைப்படப் போட்டி: நடுவர்களை வியக்க வைத்த புகைப்படங்கள்

பட மூலாதாரம், Carlos Cuenca Solana/ Galapagos Conservation Trust

படக்குறிப்பு, மனிதனால் உருவாக்கப்பட்ட குடிலுக்கும், கடல் உடும்புக்கும் உள்ள தொடர்பை குறிக்கும் இப்புகைப்படம் தீவில் மனிதர்கள் தலைப்பின் கீழ் இரண்டாம் இடத்தைப் பெற்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :