இந்தியாவின் புகைப்பட பொக்கிஷங்கள்

இந்தியாவின் முக்கியமான இடங்களின் பொக்கிஷமான புகைப்படங்கள் சிலவற்றை பார்ப்போம்.

இந்தியாவின் புகைப்பட பொக்கிஷங்கள்

பட மூலாதாரம், Felice Beato / Hulton Archive / Getty Images

படக்குறிப்பு, போர் காலங்களில் புகைப்படம் எடுக்கும் வழக்கம் தொடங்கிய காலகட்டத்தின் ஆரம்பக்கால புகைப்பட கலைஞர்களில் ஒருவர் பெலிஸ் பீட்டோ. கிரீமியா போரில் புகைப்படங்களை எடுத்த அவர், இந்தியாவிற்கு வந்தார். 1857 இல் நடைபெற்ற இந்திய சிப்பாய்க் கலகத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் ‘ஆக்ரா போர்’ நிகழ்ந்த இடத்தில் எடுக்கப்பட்ட தாஜ்மஹாலின் புகைப்படம் இது. தொடரும் புகைப்படங்கள் பீட்டோவின் புகைப்பட பொக்கிஷங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவற்றில் சில…
இந்தியாவின் புகைப்பட பொக்கிஷங்கள்

பட மூலாதாரம், Hulton Archive / Getty Images

படக்குறிப்பு, புந்தியின் மஹாராவ் ராஜா ராம் சிங் சாஹிப் பஹதூரின் இந்த உருவப்படத்துடன் இணைக்கப்பட்டுள்ள ஒரு குறிப்பு அவரை "காட்டுத்தனமானவர்" என விவரிக்கிறது. ராணி விக்டோரியாவுக்கு சொந்தமான நான்கு தொகுதிகள் கொண்ட புகைப்படக் கலை அச்சிடல்களில் (Photogravure) இருந்து எடுக்கப்பட்டது இந்த புகைப்படம்.
இந்தியாவின் புகைப்பட பொக்கிஷங்கள்

பட மூலாதாரம், Photoglob Co. via Hulton Archive / Getty Images

படக்குறிப்பு, பாம்பே (மும்பை)யின் கிர்கெளம் சாலையின் இந்த புகைப்படம், வண்ணப் புகைப்படங்களின் ஆரம்பக்கால செயல்முறையான ஃபோட்டோக்ரோம் (photochrom) தொழில்நுட்பத்திற்கு ஒரு உதாரணம். கருப்பு-வெள்ளை புகைப்பட நெகடிவ்களில் இருந்து “வண்ண கற்கள்” (tint stones) மூலமாக வண்ணப் புகைப்படங்கள் இந்த செயல்முறையில் உருவாக்கப்படுகின்றன.
இந்தியாவின் புகைப்பட பொக்கிஷங்கள்

பட மூலாதாரம், Hulton Archive / Getty Images

படக்குறிப்பு, நவநாகரீக ஆடைகள் உடுத்தும் லினிரியின் ராஜா ஷாஹிப்பின் `புக்ரி` தலைப்பாகை, வெள்ளி கம்பிகளை பின்னிப் பிணைத்தது போல் அழகாக காணப்படுகிறது. அவருடைய ஆடைகள் அற்புதமான வேலைப்பாடுகளை கொண்டுள்ளது. ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்தில் அரசர்களின் அதிகாரம் மட்டுப்பட்டாலும், அவர்களது வெளித்தோற்றமும், கெளரவமும் வழக்கம் போலவே பராமரிக்கப்பட்டது.
இந்தியாவின் புகைப்பட பொக்கிஷங்கள்

பட மூலாதாரம், Hulton Archive / Getty Images

படக்குறிப்பு, 1856 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட இந்த பாம்பே துறைமுகத்தின் இந்த புகைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் உயரமான கொடிமரங்களைக் கொண்ட இந்த கப்பல்கள், கிழக்கிந்திய கம்பெனியின் ஆதிக்கத்தை காட்டுகின்றன. 1855 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், இந்திய பிராந்தியங்கள் மற்றும் தொல்பொருட்கள் பற்றி ஆய்வு செய்வதற்காக, வரைபடங்களை உருவாக்குபவர்களை அனுப்புவதற்கு பதிலாக புகைப்படக்காரர்களை கிழக்கிந்திய கம்பெனி அனுப்பியது.
இந்தியாவின் புகைப்பட பொக்கிஷங்கள்

பட மூலாதாரம், Hulton Archive / Getty Images

படக்குறிப்பு, புகைப்படங்களின் வெளிப்பாடு காலங்களை சுருக்குவது என்பது, நிலையான புகைப்படங்கள் ஓவியங்களை விட அதிகமானபோதே சாத்தியமானது. வண்ணமில்லா புகைப்படமாக இருப்பதால், ஜெய்பூரின் இந்தத் தெரு இளஞ்சிவப்பு வண்ணத்தில் இருக்கிறதா என்பது தெரியவில்லை. 1875-76களில் ஜெய்பூர் வருகை தந்த வேல்ஸ் இளவரசருக்கு வரவேற்பு அளிக்கும்விதமாக ஜெய்பூரில் உள்ள கட்டிடங்களின் வெளிப்புறங்களில் இளஞ்சிவப்பு வர்ணம் பூசப்பட்டது.
இந்தியாவின் புகைப்பட பொக்கிஷங்கள்

பட மூலாதாரம், Samuel Bourne / Hulton Archive / Getty Images

படக்குறிப்பு, 19 ஆம் நூற்றாண்டின் சிறந்த புகைப்படக் கலைஞர்களில் ஒருவரான சாமுவேல் பார்ன் எடுத்த புகைப்படம் இது. கங்கை நதியின் மீது அமைந்துள்ள மணிகர்னிகா காட்டின் இந்த புகைப்படம், இந்திய காலநிலையை உணர்த்துகிறது. வறட்சியான காலங்களில், கேமராக்களின் கண்ணாடி தகடுகளில் புழுதி படிந்து புகைப்படம் எடுப்பதில் சிரமம் ஏற்படும். ஈரப்பதம் அதிகமான காலத்தில், கேமராவின் மர பாகங்களில் பூஞ்சை வளரும். வெயில் காலத்தில் வெப்பத்தால் கேமாரவில் உள்ள ரசாயனங்கள் சீர்குலையும். தகடுகளை கழுவுவதற்கு உடனடியாக நீர் கிடைக்காமல் போவதும் புகைப்படக் கலைஞர்கள் எதிர்கொண்ட பிரச்சனை.
இந்தியாவின் புகைப்பட பொக்கிஷங்கள்

பட மூலாதாரம், Robert Philips / Hulton Archive / Getty Images

படக்குறிப்பு, புவியியலை ஆய்வு செய்வதோடு, இந்திய மக்களையும் படம் எடுக்குமாறு அதிகாரபூர்வ புகைப்படக் கலைஞர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. டார்ஜிலிங்கில் வரிசையாக அமர்ந்திருக்கும் பெளத்த இசைக் கலைஞர்களின் இந்த புகைப்படமானது, பழங்குடியினரையும், பழக்கவழக்கங்களையும் பதிவு செய்வதற்கான முயற்சிகளுக்கான ஒரு சிறந்த உதாரணம்.
இந்தியாவின் புகைப்பட பொக்கிஷங்கள்

பட மூலாதாரம், Samuel Bourne / Hulton Archive / Getty Images

படக்குறிப்பு, தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி (முன்பு திருச்சினோபோலி) உலகின் பழமையான பாறைப் படிமங்களின் ஒன்றாகும். சாமுவேல் பார்னுக்கு மிகுந்த வியப்பை ஏற்படுத்திய இந்த பாறைகள், இங்கிலாந்து ராணுவத்தின் ஆரம்ப வெற்றியாகவும் கருதப்பட்டது. இந்த புகைப்படமானது, தொன்மை மற்றும் நவீன காலணி வரலாற்றின் கலவையாக காணப்படுகிறது.
இந்தியாவின் புகைப்பட பொக்கிஷங்கள்

பட மூலாதாரம், Samuel Bourne / Hulton Archive / Getty Images

படக்குறிப்பு, தமிழ் பாணியில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீரங்கநாதசுவாமி ஆலயம் உலகில் உள்ள மாபெரும் மத வளாகங்களில் ஒன்று. இங்கிலாந்தின் ஆதிக்கத்தின்கீழ் இந்தியா இருந்தபோது எடுக்கப்பட்ட போர்னின் புகைப்படங்கள் பிரபலமானவை. ஏனெனில் அவை இந்தியாவின் கலாசார வரலாற்றுடன் தொடர்புடையவை.