ஆண் - பெண் சமத்துவத்தை விமர்சித்த ஊழியரை பணிநீக்கம் செய்தது கூகுள்
ஆண் - பெண் சமத்துவத்தை அதிகரிக்க கூகுள் மேற்கொள்ளும் முயற்சிகளை விமர்சனம் செய்த ஊழியரை, அந்த நிறுவனம் பணிநீக்கம் செய்திருப்பதை பிபிசி உறுதி செய்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
நிறுவனத்தின் நடத்தை விதிகளை, சர்ச்சைக்குரிய அந்த நபரின் கருத்துக்கள் தகர்த்துவிட்டதாக கூகுள் தலைமை நிர்வாகி சுந்தர் பிச்சை நிறுவன ஊழியர்களுக்கு திங்களன்று அனுப்பிய மின்னஞ்சல் செய்தியில் கூறினார்.
ஆண்களுக்கும் பெண்களுக்கும் உடல் ரீதியான வேறுபாடுகள் இருப்பதாலேயே, கூகுளின் உயர் தொழில்நுட்பம் மற்றும் தலைமைப் பொறுப்புகளில் பெண்கள் குறைவாக இருப்பதற்கான காரணம் என்று கூகுளின் கருத்துக்களை பிரதிபலிக்கும் குழுவின் முன் கூறப்பட்டிருந்த அந்த குறிப்பாணை கடந்த வாரம் பரவலாக பகிரப்பட்டது.
"நமது பணியிடத்தில் தீங்கு விளைவிக்கும் பாலின வேறுபாடுகளை அதிகரிப்பதான தோற்றத்தை ஏற்படுத்தும் இந்தக் கருத்து, வரம்பு மீறியது" என்று சுந்தர் பிச்சை கூறியிருக்கிறார்.
"பாலின இடைவெளியை பாலின அடிப்படையில் குறிப்பிடுவதை நிறுத்தவேண்டும்" என்றும் கூறும் அந்த குறிப்பை வெளியிட்டவர் யார் என்று கூகுள் கூறாவிட்டாலும், அவரது பெயர் ஜேம்ஸ் டாமோர் என்று ஊடகங்கள் கூறுகின்றன.
"பாலின முரண்பாடுகளை தூண்டுவதாக கூறி நான் பணிநீக்கம் செய்யப்பட்டேன்" என்று அவர் ராய்ட்டரிடம் தெரிவித்தார்.
இதுகுறித்து மேலும் பேசிய அவர், சக ஊழியர்கள், தங்கள் நன்றியை தெரிவித்து தனிப்பட்ட செய்திகளை அனுப்பியிருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
கருத்துகள் சரியில்லை
திங்கட்கிழமை மதியம் கூகுள் ஊழியர்களுக்கு நீண்ட கடிதத்தை அனுப்பிய சுந்தர் பிச்சை, இந்த குறிப்பில் உள்ள கருத்துகளை பெரும்பாலானோர் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும்கூட, இதில் குறிப்பிடப்பட்டுள்ள பல கருத்துகள் விவாதத்திற்கு உரியவை என்று கூறியிருக்கிறார்.
ஆனால், நமது சகாக்களில் ஒரு குழுவினர் உடல்ரீதியாக வேலைக்கு பொருந்தவில்லை என்று கூறுவது நேர்மையற்றது, தவறானது என்றும் சுந்தர் பிச்சை கூறுகிறார்.
'ஊழியர்கள் அனைவரும் தொந்தரவு, அச்சுறுத்தல், சார்பு மற்றும் சட்டவிரோத பாகுபாடு இல்லாத ஒரு பணியிட கலாசாரத்தை உருவாக்க வேண்டும்' என்று விரும்பும் நமது நிறுவனத்தின் அடிப்படை மதிப்புகள் மற்றும் நடத்தை விதிமுறைகளுக்கு இது முரணானது.
"பாலினம் பற்றிய தவறான எண்ணங்களை மேம்படுத்தும் கருத்து இது" என்று கூகுளின் புதிய பன்முகத்தன்மை தலைவர் டேனியல் பிரெளன் ஏற்கனவே விமர்சித்திருந்தார்.
மெய்சிலிர்க்க வைக்கும் முப்பரிமாண கூகுள் எர்த் காட்சிகள்
பிற செய்திகள்
- பிரிவினையின் வலியையும் அன்பையும் சொல்லும் அருங்காட்சியகம்
- தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும், சமூக பொறுப்பும்: 'பிக் பாஸ்' கிளப்பிய சர்ச்சை
- இலங்கை : தேர்வு எழுதும் முஸ்லிம் மாணவிகள் முகத்தை மறைக்க தடை
- உலக அளவில் தனி நாடு கோரிக்கைகள் எழுவது எதனால்?
- தனது தளர்ந்த மார்பகங்களை புகழ்ந்து காணொளி வெளியிட்ட டி.வி. பிரபலம்
- 'கலர் தெரபி': இயற்கை மருத்துவத்தில் புதிய யுக்தி
- கருவுற்றதை அறியாத 10 வயது சிறுமி: கருக்கலைப்பு செய்து கொள்ள மறுப்பு
தொட்டால் பேசும் கூகுள் ஜாக்கெட்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்














