You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மனைவியின் உடல் வடிவை வர்ணித்த கணவருக்கு வந்த சோதனை
தன்னுடைய மனைவியின் உடல் அழகை வர்ணித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட அமெரிக்கக் கணவர் ஒருவர், உடல் வடிவம் மற்றும் பெண்ணியம் குறித்த எதிர்வினைகளை இணையதளத்தில் சந்தித்து வருகிறார்.
"வளைவுகள் நிறைந்த தேவதையின் கணவர்" என்று தன்னைக் கூறிக்கொள்ளும், ராபி டிரிப் எனும் தொழில் அதிபர், பிரபலமடைந்த அந்தப் பதிவில், தன் மனைவியுடன் இருக்கும் படத்தை வெளியிட்டு, ஒரு பெண்ணியவாதியாக தான் ஆன பின்பு, உடலில் நிறைய வளைவுகள் இருக்கும் பெண்களும் ஈர்ப்பு மிக்கவர்களாக இருக்கலாம் என்பதைத் தான் உணர்ந்ததாக விவரித்துள்ளார்.
"நான் இந்தப் பெண்ணையும், அவளது வளைவான உடலையும் நேசிக்கிறேன். உடல் எடை அதிகமுள்ள பெண்கள் மீதான ஈர்ப்பின் காரணமாக, பதின்ம வயதில் என் நண்பர்கள் என்னை அடிக்கடி கேலி செய்தனர்," என்று ராபி எழுதியிருந்தார்.
நான் வளர்ந்து ஆளான பிறகு, பெண்ணியம், ஊடகம் எவ்வாறு பெண்களைக் குறுகலான வகையில், மெல்லிய, இளைத்த, உயரமான உடல்வாகுமே அழகு என்று ஓரங்கட்டுகின்றன என்பதைப்பற்றிய அறிவைப் பெற்றபோது, அந்தப் பொய்களை நிறைய ஆண்கள் ஏற்றுக் கொள்கின்றனர் என்றும் உணர்ந்தேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
"அடர்த்தியான தொடைகளையும், பின்னழகையும், மெல்லிய இடை மடிப்புகளையும் உடைய இந்தப் பெண்ணைவிட வேறு எதுவும் என்னை ஈர்க்கவில்லை," என்று அவர் எழுதியுள்ளார்.
பொதுவாக ஈர்ப்புள்ளதாகக் கருதப்படும் "உயரமான மற்றும் ஒல்லியான" உடல்வாகுடைய பெண்களை ஆண்கள் விரும்புவதைப் புகழும் வகையில் உள்ள அந்தப் பதிவு இணையதளத்தில் விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
வெள்ளிக்கிழமை முதல் 18,000 முறைக்கும் மேல் பகிரப்பட்டுள்ள தன் பதிவில், பத்திர்கையாளர் ஜூலியா புகாசேவ்ஸ்கை, "பெண்ணியம் என்பது வளைவுகளைக் கொண்ட பெண்கள் மீது ஈர்ப்பு கொள்வதல்ல," என்று கூறியுள்ளார்.
"ஒரு வழக்கமான உடலைமைப்பைப் பெற்றுள்ள பெண்ணுடன் உறவாடுவதால் உங்களை ஏன் ஒரு நவீனத் துறவி என்று நினைக்கிறீர்கள்," என்று லூசியா ட்ரேகோ என்னும் பயன்பாட்டாளர் கேட்டுள்ளார்.
"நான் ஒரு பெண்ணியவாதி. ஆனால் பெரும்பான்மையாக சமூகத்தில் பெண்களைக் காட்சிப்பொருளாக்கும் காரணங்களுக்காக அல்லாமல் வேறு காரணங்களுக்காக அவர்களைக் காட்சிப்பொருளாக்குவேன்," என்பதே அந்தப் பதிவின் பின்னால் உள்ள பொருள் என்று காட்டமாக எழுதியுள்ளார் நேட் குக் என்னும் ட்விட்டர் பயன்பாட்டாளர்
தன்னுடைய மனைவி வழக்கமான உடலமைப்பைப் பெற்றவரல்ல என்று மறைமுகமாகக் கூறுவதைப் பிறரும் விமர்சனம் செய்துள்ளனர். சிலர் அவருக்கு ஆதரவாகவும் பதிவிட்டுள்ளனர்.
"எனக்கு இந்தப் பதிவு பிடித்துள்ளது. எதற்கெடுத்தாலும் சிலர் கோபப்படுகின்றனர். உங்களைப்போன்று இன்னும் நிறைய ஆண்கள் இந்த உலகில் வேண்டும்," என்று அமந்தா ஃபோத்தரின்கம் என்னும் இஸ்டாகிராம் பதிவாளர் எழுதியுள்ளார்.
பெண்களின் அழகைப் பற்றிய சிந்தனையை மாற்றியதற்கான உரையாடலைத் தொடங்கியதாக டிரிப்பை சிலர் பாராட்டியுள்ளனர். "அழகாகவும், உண்மையாகவும், எப்படி இருக்க வேண்டுமோ அப்படி உள்ளது. உண்மையான ஆணாகவும், உண்மையான பெண்ணாகவும் நீங்கள் உள்ளீர்கள். உண்மையைக் கூறியதற்கும், பலருக்கும் நம்பிக்கை அளித்ததற்கு நன்றி," என்று லெட்டிஸ் ட்லூவ் என்பவர் பாராட்டியுள்ளார்.
"ஒரு ஆணோ, பெண்ணோ, பிறரையும் தன்னையும் பார்க்கும் விதத்தை நீங்கள் மாற்றியுள்ளீர்கள் என்றால், நீங்கள் ஒரு அற்புதமான செயலைச் செய்துள்ளீர்கள் என்று பொருள்," என்று கேர்514 @char514 என்னும் பயன்பாட்டாளர் கூறியுள்ளார்.
பிற செய்திகள்:
- 'நான் மட்டும் காரை நிறுத்தியிருந்தால் எல்லாம் முடிந்து போயிருக்கும்'
- 'ராயல் இண்டியன்' விமானப்படை மத அடிப்படையில் பிரிக்கப்பட்டதா?
- பார்க்க வந்தாரா, தாக்க வந்தாரா? ஓ.பி.எஸ் தொண்டருக்கு அடி-உதை
- வட கொரியா மீதான புதிய தடைகளுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல்
- இந்து முஸ்லிம் ஒற்றுமை குறித்து ஆழமாக சிந்தித்த மூன்று பேர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
- டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்