You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
`எதிர் பாலினத்துடன் தனிமையில் உணவருந்த அதிக அமெரிக்க பெண்களுக்கு விருப்பமில்லை’
அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ், தனது மனைவியைத் தவிர வேறு எந்தப் பெண்ணுடனும் தனியாக உணவருந்த மாட்டார் என்ற தகவல் வெளியானபோது பலரது புருவங்கள் உயர்ந்தன.
இது எவ்வளவு பிற்போக்கான வழக்கம்? என்று இணைய பயன்பாட்டாளர்கள் தங்கள் குமுறலை வெளிப்படுத்தினர்.
இப்போதுதான், அவர் தனிமையில் இருப்பதில்லை என தெரிகிறது.
பாதிக்கும் அதிகமான பெண்களும், 45 சதவிகித ஆண்களும், துணை அதிபரின் கருத்துக்கு உடன்பட்டுள்ளனர் என்று நியூயார்க் டைம்ஸ் நாளிதழின் ஆச்சரியமூட்டும் கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.
அது சரி... மது அருந்தும்போது எப்படி? என்று கேட்டால், ஒருவருக்கு ஒருவர் அருந்தும் சூழ்நிலை அமைந்தால் அது பொருத்தமுள்ளதாக இருக்கும் என்று 29 சதவிகித பெண்கள் கருதுவதாகத் தெரியவந்துள்ளது.
பிற செய்திகள்:
எனினும், இதுபற்றி மார்னிங் கன்சல்ட் நிறுவனம் 3,500 பேரிடம் நடத்திய ஆய்வில் - அவர்கள் சார்ந்த அரசியலுக்கு தக்கவாறு கருத்துகள் மாறுபடுபவையாக இருந்தது: எந்த அளவுக்கு நமது கருத்துக்களை தாராளமாக வெளியிடுகிறோமோ அந்த அளவுக்கு எதிர் பாலினத்தைச் சேர்ந்தவருடன் இணக்கமாக இருக்க வாய்ப்புள்ளது என தெரிய வந்துள்ளது.
ஜனநாயக கட்சியினர் 71 சதவிகிதம் பேருடன் ஒப்பிடுகையில், குடியரசு கட்சியினர் 62 சதவிகிதம் பேர், இதை ஏற்றுக் கொள்வதாகக் கூறியுள்ளனர்.
மத ரீதியாக பார்க்கையில், இந்த விஷயத்தில் சில வேறுபாடுகளைக் காண முடிகிறது - ஒருவர், எந்த அளவுக்கு அதிக பக்தியைக் கொண்டுள்ளாரோ, அவர் மிகவும் குறைவாக இந்த விஷயத்தை அணுகுவார்.
அதேபோல கல்வி ரீதியாகப் பார்க்கையில், பட்டப்படிப்பு அல்லது உயர் கல்வி படித்த 18 சதவிகிதத்தினருடன் ஒப்பிடும்போது, கல்லூரிவரை எட்டாதவர்களில் நான்கில் ஒரு பங்கினர், இந்த விஷயத்தை பொருத்தமில்லாததாகக் கருதுவர்.
பிபிசியின் பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்