You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஃபிரான்ஸில் மசூதிக்கு வெளியே துப்பாக்கிச் சூடு: 8 பேர் காயம்
ஃபிரான்ஸின் தெற்கு பகுதியில், மசூதி ஒன்றிற்கு வெளியே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் எட்டு பேர் காயம் அடைந்துள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஞாயிறன்று உள்ளூர் நேரப்படி இரவு 10.30 மணிக்கு, அவீன்யோங்கில் உள்ள அராமா மசூதியிலிருந்து வழிபாட்டாளர்கள் வெளியேறிக் கொண்டிருந்த சமயத்தில் ஹூட் ( சட்டையுடன் தைக்கப்பட்ட ஒரு வித முக்காடு) அணிந்திருந்த சந்தேக நபர்கள் இருவர் அவர்களை நோக்கி வந்தனர்.
சந்தேக நபர்கள் கைத்துப்பாக்கியும், சிறிய துப்பாக்கி ஒன்றையும் வைத்திருந்தனர் என்றும் காரிலிருந்து இறங்கி வந்து கூட்டத்தை நோக்கி சுட்டனர் என்றும் ஃபிரான்ஸ் பத்திரிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
இதை பயங்கரவாத தாக்குதலாக கருதவில்லை என போலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிற செய்திகள்:
மசுதிக்கு வெளியே நான்கு பேர் காயமடைந்தனர்; மேலும் 50மீட்டர் தொலைவில் உள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் 7 வயது சிறுமி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர், துப்பாக்கிச் சூட்டில் சிதறிய பொருட்களால் காயமடைந்தனர் என நேரில் பார்த்தவர்கள் தெரிவித்ததாக `ல பிரொவென்ஸ்` என்ற அந்த பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
காயமடைந்த எட்டு பேரில் இரண்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மசூதியிலிருந்து வெளியே வந்தவர்கள் தாக்குதல்தாரிகளின் இலக்குகள் அல்ல என சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
அவீன்யோங் தாக்குதல் பயங்கரவாத தாக்குதலாகக் கருதப்படமாட்டாது என அரச வழக்கறிஞர்கள் அலுவலகம் தெரிவித்துள்ளது. லாரே சபாட் என்ற மாவட்ட நீதிபதி, இது இரண்டு இளைஞர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலாக இருக்கலாம் என தெரிவித்துள்ளார்.
வியாழனன்று பாரிசின் புறநகர்ப் பகுதியான க்ரெட்டெயில், மசூதி ஒன்றின் முன்னிருந்த கூட்டத்திற்குள் கார் ஏற்ற முயன்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். ஆனால் அதில் யாரும் காயமடையவில்லை.
ஏப்ரல் மாதத்தில் பாரிஸ் போலிஸார் மீது நடத்தப்பட்ட கடுமையான தாக்குதல் மற்றும் சமீப வருடங்களில் நடத்தப்பட்ட தொடர் பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களை தொடர்ந்து, ஃபிரான்ஸில் அதிகப்படியான பாதுகாப்பு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பிபிசியின் பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்