உலகம் உங்கள் கண்களில் - கடந்த வாரம்

கடந்த வாரம் உலக அளவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த புகைப்படங்களின் தொகுப்பு.

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் கட்டுமான இடத்தின் பக்கத்தில் தன்னுடைய குழந்தையோடு நிற்கும் தினக்கூலி பெண்ணொருவர்

பட மூலாதாரம், Cathal McNaughton/REUTERS

படக்குறிப்பு, இந்தியத் தலைநகர் டெல்லியில் கட்டுமான இடத்தின் பக்கத்தில் தன்னுடைய குழந்தையோடு நிற்கும் தினக்கூலி பெண்ணொருவர்
செவ்வாய்க்கிழமை இரவு இங்கிலாந்து முழவதும் இடியடன் கூடிய கனமழையும், ஆலங்கட்டி மழையும் பெய்த பின்னர் ஸ்பினாக்கர் கோபுரத்திற்கு அருகில் மின்னல் கீற்றுக்கள்

பட மூலாதாரம், Steve Parsons/PA

படக்குறிப்பு, செவ்வாய்க்கிழமை இரவு இங்கிலாந்து முழுவதும் இடியுடன் கூடிய கனமழையும், ஆலங்கட்டி மழையும் பெய்த பின்னர் ஸ்பினாக்கர் கோபுரத்திற்கு அருகில் மின்னல் கீற்றுக்கள்
சீனாவின் ஹூனான் மாகாணத்தின் உள்ளூர் தொழிலாளர் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இலவச குழந்தைகள் பயிற்சியில் பலர் பங்கேற்றனர்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, சீனாவின் ஹூனான் மாகாணத்தின் உள்ளூர் தொழிலாளர் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இலவச குழந்தைகள் பராமரிப்பு பயிற்சியில் பலர் பங்கேற்றனர்
பிரிட்டனின் ஹான்னா கோக்குரோஃப்ட் உலக மாற்றுத் திறனாளர் தடகள சாம்பியன் போட்டியில் 3வது தங்கப்பதக்கம் வென்றார்

பட மூலாதாரம், Henry Browne/REUTERS

படக்குறிப்பு, பிரிட்டனின் ஹான்னா கோக்குரோஃப்ட் உலக மாற்றுத் திறனாளர் தடகள சாம்பியன் போட்டியில் 3வது தங்கப்பதக்கம் வென்றார். 24 வயதான ஹான்னா கோக்குரோஃப்ட் ஏற்கெனவே 100 மீட்டர், 800 மீட்டர் தங்கப்பதக்கங்களை வென்றிருந்த நிலையில் 400 மீட்டரிலும் வென்றுள்ளார்.
தான்சானியாவிலுள்ள உலக மரபு செல்வ பட்டியலில் இடம்பெற்றுள்ள இடமான நகொரோன்கோரோ விலங்குகள் பாதுகாப்பு பகுதியில் பெண் சிங்கம் சிறுத்தை குட்டிக்கு பாலூட்டும் இந்த புகைப்படம் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.

பட மூலாதாரம், Joop Van Der Linde/Panthera/Reuters

படக்குறிப்பு, தான்சானியாவிலுள்ள உலக மரபு செல்வ பட்டியலில் இடம்பெற்றுள்ள இடமான நகொரோன்கோரோ விலங்குகள் பாதுகாப்பு பகுதியில் பெண் சிங்கம் சிறுத்தை குட்டிக்கு பாலூட்டும் இந்த புகைப்படம் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. எதிரிகளாக கருதப்படும் சிங்கத்திற்கு சிறுத்தைக்கும், இனங்களுக்கிடையே பிணைப்பு இருப்பதை காட்டு முதல் சான்று இந்த புகைப்படம் என்று விலங்கு பாதுகாப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
வெளியுறவு மற்றும் காமன்வெல்த் அலுவலகங்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்த அரச குடும்பத்தினர் போலந்திலும், ஜெர்மனியிலும் 5 நாட்கள் பயணம் மேற்கொண்டனர்

பட மூலாதாரம், Thomas Kienzle/REUTERS

படக்குறிப்பு, ஜெர்மனியின் `யெடெல்பர்க்கில் பயணம் மேற்கொண்டபோது, முடிச்சிவடி உப்புப் பிஸ்கட்டை இளவரசர் வில்லியமும், இளவரசி கேட்டும் தங்களுடைய கைகளால் செய்ய முயன்றர். வெளியுறவு மற்றும் காமன்வெல்த் அலுவலகங்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்த அரச குடும்பத்தினர் போலந்திலும், ஜெர்மனியிலும் 5 நாட்கள் பயணம் மேற்கொண்டனர்
கிழக்கு திமோரின் திலியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட ஃபிரிட்டிலின் கட்சியின் ஆதரவாளர்கள்

பட மூலாதாரம், VALENTINO DARIEL SOUSA/AFP

படக்குறிப்பு, கிழக்கு திமோரின் திலியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட ஃபிரிட்டிலின் கட்சியின் ஆதரவாளர்கள்
வியாழக்கிழமை இரவு கிரேக்க தீவின் 12 கிலோமீட்டர் வட கிழக்கில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ரிக்கடர் அளவில் 6.7 ஆக பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டது.

பட மூலாதாரம், LOUISA GOULIAMAKI/afp

படக்குறிப்பு, கோஸ் தீவிலுள்ள முக்கிய துறைமுகத்தில் காணப்படும் நில விரிசல்கள். துருக்கியின் கடலோரத்திற்கு அருகில் வியாழக்கிழமை இரவு கிரேக்க தீவின் 12 கிலோமீட்டர் வட கிழக்கில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ரிக்டர் அளவில் 6.7 ஆக பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டது. குறைந்தது 2 பேர் பலியாகினர். 115 பேர் காயமுற்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :