You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
செளதி அரசரை கடவுளுக்கு நிகராக புகழ்ந்த பத்திரிக்கையாளர் இடைநீக்கம்
செளதி நாட்டின் அரசரை அளவிற்கு அதிகமாக புகழ்ந்த காரணத்தால் பத்திரிக்கையில் கட்டுரை எழுதுபவர் ஒருவர் தனது பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ரமலான அல் அன்சி என்னும் கட்டுரையாளர், அல் ஜசீரா பத்திரிக்கையில் பொதுவாக கடவுளை குறிப்பதற்காக பயன்படுத்தப்படும் வார்த்தைகளை கொண்டு அரசரை பாராட்டினார்.
அரசரை அளவிற்கு அதிகமாக புகழ்வது சகஜமான ஒன்றுதான் மேலும் அது எதிர்பார்க்கப்படும் ஒரு விஷயமும் கூட. ஆனால் கடவுளுடன் ஒப்பிடுவது என்பது ஒப்புக் கொள்ள முடியாத ஒன்று.
அதன் விளைவாக "மிகவும் அதிர்ச்சியடைந்த" அரசர் சல்மான், அன்சியை இடைநீக்கம் செய்ய உத்தரவு வழங்கியதாக செளதி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பிற செய்திகள்:
- விமானத்தில் `குண்டுப்பெண்' என தொல்லை கொடுத்தவரை வறுத்தெடுத்த மாடல் அழகி!
- தென் சீனக்கடலில் அமெரிக்க போர்க் கப்பல்: போர் விமானம், கப்பலை அனுப்பி சீனா பதிலடி
- நிபந்தனைகளை நிறைவேற்ற கத்தாருக்கு மேலும் 48 மணிநேர அவகாசம்
- கத்தார் நெருக்கடி: சௌதி அரேபியா வரம்பு மீறிவிட்டதா?
- 'செளதி அரசர் ஷா சல்மானின் மனதில் கத்தார் மக்களுக்கு இடம் உண்டு'
வெள்ளிக்கிழமையன்று அந்த செய்தித்தாள் மன்னிப்பு கோரியது. அதில் அன்சி, அரசர் சல்மானை 'ஹலீம்' அல்லது மிகவும் பொறுமையானவர் மற்றும் 'ஷ்தீத் அல் இகாப்' என குறிப்பிட்டிருந்தார். இந்த இரண்டுச் சொற்களுமே கடவுளை குறிப்பதற்கான சொற்களாகும்.
"இஸ்லாமியர்களின் இரண்டு புனித மசூதிகளாக கருதப்படும் மெக்கா மற்றும் மதினா ஆகியவற்றை பாதுகாக்கும் அரசரை குறித்து எழுத்தாளர் அவ்வாறு எழுதியது ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல. அரசருக்கு கடவுள் அத்தகைய குணங்களை கொடுத்திருந்தாலும், அவ்வாறு கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது; இரண்டு புனித மசூதிகளை, இஸ்லாமை, மக்களை, தாயகம் மற்றும் மக்களை காப்பதனால் கடவுள் அவரை பாதுகாக்கட்டும்`` என அல் ஜசீரா தெரிவித்துள்ளது.
அந்த செய்தித்தாளிற்கு எதிரான நடவடிக்கையும் எடுக்கப்படும் என சில செளதி ஊடகங்கள் சில தெரிவிக்கின்றன.
குவைத் கூட்டம் கத்தார் பிரச்சினைக்கு தீர்வைத் தருமா?
பிபிசியின் பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்