பிரிட்டனில் பயங்கரவாத அச்சுறுத்தல் நிலை உச்சபட்சமாக அதிகரிப்பு

பிரிட்டனின் பயங்கரவாத அச்சுறுத்தலுக்கான அளவு உச்சபட்சமாக நெருக்கடி நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது என்றும், மேலும் உடனடி தாக்குதல் நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன என்றும் தெரீஸா மே கூறியுள்ளார்.

மான்செஸ்டர் குண்டுவெடிப்பில் சந்தேக நபரான சல்மான் அபெடி தாக்குதல் சம்பவத்தில் தனியோருவராக இயங்கினாரா என்று விசாரணையாளர்கள் முடிவுக்கு வராதததையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரீஸா மே குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய பகுதிகளை பாதுகாக்க ராணுவப் படையினர் தற்போது அனுப்பப்பட உள்ளனர்.

கடந்த திங்கள் மாலை மான்செஸ்டர் அரங்கத்தில் தற்கொலை குண்டுதாரி ஒருவர் நடத்திய தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 59 பேர் காயம் அடைந்தனர்.

'விவேகமான பதில்நடவடிக்கை'

பொதுமக்களை பாதுகாக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ள ஆயுதமேந்திய காவல்துறை அதிகாரிகளுக்கு துணையாக பொதுமக்கள் அதிகம் கூடும் பொது இடங்களில் படையினர் நிலை நிறுத்தப்படுவார்கள் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

இசைக்கச்சேரிகள் உள்பட வரவிருக்கும் வாரங்களில் நடைபெறும் பிற நிகழ்ச்சிகளிலும் ராணுவ படையினரை காணலாம் என்று கூறியுள்ள மே, காவல்துறை அதிகாரிகள் கட்டுப்பாட்டின் கீழ் படையினர் இயங்குவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

அளவுக்குகதிமாக பொதுமக்கள் அச்சமடைவதை தான் விரும்பவில்லை என்றும், ஆனால் அதே சமயம் சரியான தேவைக்கேற்ற மற்றும் விவேகமான எதிர்வினை நடவடிக்கைகள் இவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உச்சபட்ச அச்சுறுத்தல் அளவு என்பது கூட்டு பயங்கரவாதம் பகுப்பாய்வு மையத்தால் தீர்மானிக்கப்படுகிறது.

இதுவரை இருமுறைதான் உச்சபட்ச அச்சுறுத்தல் நிலை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்