You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிரிட்டனில் சமீபத்திய வரலாற்றில் நடைபெற்ற தாக்குதல்கள் குறித்த ஓர் பார்வை
மான்செஸ்டர் அரங்கத்தில் நடைபெற்ற தற்கொலை தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 59 பேர் காயமடைந்துள்ளனர்.
ஐக்கிய ராஜ்ஜியத்தின் சமீபத்திய வரலாற்றில் நடைபெற்ற பிற தாக்குதல் சம்பவங்களை தொகுத்து வழங்குகிறது இக்கட்டுரை.
லண்டன் தாக்குதல்கள், 7 ஜூலை 2005
நான்கு தற்கொலை தாக்குதாரிகள் லண்டன் போக்குவரத்து அமைப்பு மீது 2005 ஆம் ஆண்டு, ஜுலை 7ம் நாள், தாக்குதல் தொடுத்தனர். இதுவே , 7/7 என பிரபலமாக குறிக்கப்படும் ஒரு நாளானது.
வீட்டிலிருந்தபடியே தயாரிக்கப்பட்ட மூன்று குண்டுகள் லண்டன் சுரங்கப்பாதையில் அடுத்தடுத்து விரைவாக வெடிக்க வைக்கப்பட்டன. இதில், 27 பேர் கொல்லப்பட்டனர்.
நான்காவது வெடிப்பு டேவிஸ்டாக் சதுக்கத்தில் உள்ள ஓர் நெரிசல் மிகுந்த பேருந்துக்குள் நிகழ்ந்தது. அதில், 14 பேர் கொல்லப்பட்டனர்.
முகமது சித்திக் கான் என்பவரின் தலைமையில் வடபுற இங்கிலாந்தை சேர்ந்த 4 இஸ்லாமியவாத தீவிரவாதிகள்தான் இதைச் செய்தவர்கள்.
தாக்குதல்தாரிகளில் மூன்று பேர் பிரிட்டனில் பிறந்தவர்கள். அவர்களுடைய பெற்றோர்கள் பாகிஸ்தானிலிருந்து குடியேறியவர்கள்.
பிற செய்திகள் :
கிளாஸ்கோ விமான தாக்குதல், 30 ஜூன் 2007
பிரிட்டன் பிரதமராக கோர்டன் பிரவுன் பதவியேற்று மூன்று தினங்கள் கழித்து, இரு ஆண்கள் கிளாஸ்கோ விமான நிலைய முனைய கட்டடத்திற்குள் தங்களுடைய ஜீப்பை ஓட்டி சென்றனர். பின்னர், அந்த வாகனம் தீப்பிழம்பாக வெடித்து சிதறியது.
தாக்குதல்தாரிகளில் ஒருவர் பிலால் அப்துல்லா. இராக்கிய வம்சாவளியை சேர்ந்த பிரிட்டனில் பிறந்த இஸ்லாமிய மருத்துவராவார். தனது ஜீப்பைவிட்டு இறங்கி கட்டடத்திற்குள் இருந்தவர்களை தாக்க முயற்சித்தார். ஆனால், அதற்கு போலீஸார் அவரை அடக்கிவிட்டனர்.
ஜீப் ஓட்டுநரான கஃபீல் அஹமது வாகனத்திலிருந்து தப்பிவிட்டார். காரணம் அவரும் தீயில் சிக்கிக்கொண்டார். பின்னர், தீயினால் ஏற்பட்ட காயம் காரணமாக கஃபீல் மரணம் அடைந்தார். இந்த தாக்குதலில் வேறு உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.
லீ ரிக்பி,22 மே 2013
மிஷெல் அடெபோலஜோ மற்றும் மிஷெல் அடெபொவல் என்ற இரு ஆண்கள் தென் கிழக்கு லண்டனில் உள்ள வூல்விச் பகுதியிலிருந்த ராணுவ குடியிருப்புக்கு வெளியே இருந்த சாலையில் பிரிட்டிஷ் ராணுவ வீரர் லீ ரிக்பியை கொன்றனர்.
ராணுவ வீரர் ரிக்பி கார் ஏற்றி கொல்லப்பட்டார். அதன்பிறகு, ஒரு வெட்டுக்கத்தி மற்றும் ஒரு இறைச்சி வெட்டும் கத்தியை கொண்டு தாக்கப்பட்டார்.
பிரிட்டிஷ் ஆயுதமேந்திய படைகள் முஸ்லிம்களை கொலை செய்வதற்கு பழிக்குப்பழியாக இந்த ராணுவ வீரரை கொன்றதாக அவர்கள் கூறியுள்ளனர்.
தாக்குதல்தாரிகள் இருவரும் நைஜீரிய வம்சாவளியை சேர்ந்த பிரிட்டிஷ் பிரஜைகள். இஸ்லாமுக்கு மதமாறுவதற்குமுன், கிறித்துவர்களாக வளர்க்கப்பட்டனர்.
ஜோ காக்ஸ், 16 ஜூன் 2016
தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான ஜோ காக்ஸை, தாமஸ் மெயர் என்பவர் கொலை செய்தார். வடபுற இங்கிலாத்தில் உள்ள வெஸ்ட் யார்க்க்ஷையரின் பர்ஸ்டால் நகரத்தில் ஒரு நூலகத்திற்கு வெளியே ''பிரிட்டன்தான் முதலில்'' என்று கத்தினார்.
பிரிட்டனின் அரசு சார்பில் குற்றவியல் வழக்கு தொடுக்கும் அமைப்பான சி.பி.எஸ் இக்கொலையை பயங்கரவாத செயல் என்று வர்ணித்திருந்தது.
ஜோ காக்ஸை, மெயர், துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் கொன்றார். அச்சமயம் அனைவரும் தப்பிக்கும்படி ஜோ காக்ஸ் கத்தியது குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேற வேண்டுமா அல்லது வேண்டாமா என்பது குறித்த மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பின் பிரசாரத்தின் போது இத்தாக்குதல் நிகழ்ந்துள்ளது.
ஜோ காக்ஸ் மரணத்தை தொடர்ந்து பிரசார நிகழ்வுகள் கைவிடப்பட்டன.
வெஸ்ட்மின்ஸ்டர் தாக்குதல், 22 மார்ச் 2017
லண்டனில் உள்ள நாடாளுமன்ற இல்லத்திற்கு அருகே வெஸ்ட்மின்ஸ்டர் பாலத்தில் சென்ற பாதசாரிகள் மீது காலித் மசூத் என்பவர் தான் ஓட்டிச்சென்ற வாகனத்தால் இடித்து விபத்துக்குள்ளாக்கினார்.
வெஸ்ட்மின்ஸ்டர் பாலத்திலிருந்த அரண்மனையின் வெளிப்புற கதவுகளில் மசூத் தன்னுடைய காரை மோதினார். பின்னர், காரிலிருந்து இறங்கி முன்னேற முயற்சித்த போது கீத் பால்மர் என்ற போலீஸ் அதிகாரியை எதிர்கொண்டார்.
கீத் பால்மரை கொடூரமாக கத்தியால் குத்திய மசூத்தை பிற அதிகாரிகள் சுட்டுக் கொன்றனர்.
போலிஸ் அதிகாரி பால்மர் மற்றும் நான்கு பாதசாரிகள் இத்தாக்குதலில் கொல்லப்பட்டனர்.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்