சவுதி அரேபியாவில் முக்கிய உரையாற்றவுள்ள டொனால்ட் டிரம்ப்
இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை சவுதி அரேபியாவில் உரையாற்றவுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்லாம் மதத்தில் தீவிரவாதத்தை எதிர்கொள்வது தொடர்பான அவசியத்தை தனது உரையில் அடிக்கோடிட்டு காட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பட மூலாதாரம், SAUDI PRESS AGENCY HANDOUT
அமெரிக்க அதிபரான பிறகு, டிரம்ப் மேற்கொண்டுள்ள முதல் வெளிநாட்டு பயணத்தின் இரண்டாவது நாளில் நடக்கவுள்ள பிராந்திய தலைவர்களின் உச்சி மாநாட்டில் அவர் உரையாடவுள்ளார்.
இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பினருக்கு எதிராக அமெரிக்கா நடத்தும் போருக்கு ஆதரவினை உயர்த்திப் பிடிக்கும் வகையில் மற்ற நாடுகளின் ஒத்துழைப்பை அதிகரிக்கும் முயற்சியை டிரம்ப் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, சனிக்கிழமையன்று சவுதி அரேபியாவுடன் 350 பில்லியன் டாலர் மதிப்பிலான வணிக ஒப்பந்தத்தில் அமெரிக்கா கையெழுத்திட்டது.
அமெரிக்க வரலாற்றில் நடந்த மிகப் பெரிய ஆயுத ஒப்பந்தமும் இதில் அடங்கும்.
சவுதி அரேபியாவின் செல்வாக்குக்கு தீங்கு ஏற்படுத்தும் பிராந்திய எதிராளியான இரானை சமாளிக்கும் வகையில் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டதாக அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செயலரான ரெக்ஸ் டில்லர்சன் தெரிவித்தார்.
அதே வேளையில், அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ-யின் தலைவரான ஜேம்ஸ் கோமியை நீக்கியதால் ஏற்பட்ட சச்சரவு, டிரம்பின் சவதி அரேபிய பயணத்தைப் பாதிக்கும் வகையில் அமைந்தது.
இதையும் படிக்கலாம்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












