இன்ஸ்டாகிராமில் ஐ எஸ் தீவிரவாத குழுவின் பிரசார செய்தி நிறுவனம்

பட மூலாதாரம், INSTAGRAM
இஸ்லாமிய அரசு என்று அழைத்து கொள்ளும் குழுவினரின் பிரசார அமைப்பு ஒன்று முதல்முறையாக இன்ஸ்டாகிராமில் கணக்கு ஒன்றை தொடங்கியுள்ளது.
நஷிர் செய்தி நிறுவனம் என்று அழைக்கப்படும் இந்த குழு, கடந்த 11 ஆம் தேதி டெலிகிராம் செயலியில் அதன் வசமிருந்த நிறுவப்பட்ட தொடர்புகள் வழியாக தான் புதிதாக அமைத்த இன்ஸ்டாகிராம் கணக்கு குறித்து பரப்பியது.
ஐ எஸ் குறித்த தகவல்களை பரப்புவதற்காக சோதனை அடிப்படையில் கணக்கை தொடங்கியதாக நஷிர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆனால், விதிமுறைகளை மீறியதற்காக அந்த கணக்கை இன்ஸ்டாகிராம் நீக்கியுள்ளது.
''பயங்கரவாதம், பயங்கரவாத பிரசாரம் அல்லது பயங்கரவாத நடவடிக்கைகளை புகழ்வது போன்ற செயல்களை இன்ஸ்டாகிராம் சகித்து கொள்ளாது. அதுபோன்ற தகவல்கள் எங்கள் பார்வைக்கு வரும் போது அதனை உடனடியாக நீக்க தீவிரமாக வேலை செய்கிறோம்''என்று இன்ஸ்டாகிராமின் பெண் பேச்சாளர் ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
ஐ எஸ் குறித்த செய்திகளை பரப்ப ஃபேஸ்புக்கில் இரு கணக்குகளை நஷிர் செய்தி நிறுவனம் தொடங்கி அதற்கு மறுநாள் இன்ஸ்டாகிராம் கணக்கும் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது அதன் இரு சமூக ஊடக கணக்குகளும் மூடப்பட்டுள்ளன.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












