ஸ்டாக்ஹோமில் மக்கள் கூட்டத்தில் லாரியை ஏற்றி தாக்குதல்:3 பேர் உயிரிழப்பு
சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமின் மையப்பகுதியில் ஒரு கடைக்குள் லாரியைப் புகுத்தி நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்ததாக சுவீடன் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பட மூலாதாரம், LASSE GARE
துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பல பேர் காயமடைந்திருப்பதாக சுவீடன் போலீசார் தெரிவித்தனர்.
நகரில் பாதசாரிகள் பயன்படுத்தும் முக்கியப் பகுதியான குயின்ஸ் வீதியில், உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு இந்தத் தாக்குதல் நடைபெற்றது.
ஒரு லாரி, டிபார்ட்மென்டல் ஸ்டோருக்குள் கண்ணாடிகளை உடைத்துக் கொண்டு புகுந்ததாகவும், அதில் அடிபட்டு மக்கள் கிழே விழுந்து கிடந்ததைப் பார்க்க முடிந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
சம்பவத்துக்குப் பிறகு சிட்டி சென்டரை போலீசார் சுற்றி வளைத்து, அரண் அமைத்துள்ளனர்.
ஆனால், உயிரிழந்தவர்கள் அல்லது காமடைந்தவர்களின் எண்ணிக்கை குறித்து போலீசார் உறுதிப்படுத்தவில்லை.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












