ஆக்ரோஷமான ஆக்டோபஸை சாப்பிட டால்ஃபின்கள் கையாளும் `தந்திரம்'
ஆக்டோபஸ், டால்ஃபின்களுக்கு மிகப்பிடித்தமான உணவு. ஆனால், ஆக்டோபஸை இரையாக சாப்பிடும்போது கொடிய இடையூறுகளை டால்ஃபின்கள் சந்திக்கும் நிலையும் ஏற்படலாம்.

பட மூலாதாரம், Kate Sprogis/Murdoch University
இதனை தடுப்பதற்காக, பெரிய இரைகளை கடித்து உண்ணும் அளவிலான துண்டுகளாக மாற்றிக் கொள்வதற்கு அதிகமான `தந்திரங்களை' டால்ஃபின்கள் கடைபிடிக்கின்றன என்று ஆஸ்திரேலிய கடல் உயிரியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.ஃ
ஆக்டோபஸ்களை பிடித்தவுடன் அவற்றை அசைத்து, காற்றில் மேலே தூக்கி போட்டு மீண்டும் பிடித்து சாப்பிடுவதற்கு தயார் செய்வதை ஆய்வாளர்கள் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.
பல ஆண்டுகள் கண்காணித்து தொகுத்த கண்டுபிடிப்புகள் "மரைன் மம்மல் சையின்ஸ்" இதழில் விவரிக்கப்பட்டுள்ளது.
"டால்ஃபின்களின் இந்த நடத்தையை கடல் உணவு தயாரிப்போடு எல்லோரும் தொடர்பு படுத்துகின்றனர்" என்று இந்த ஆய்வை வழிநடத்திய டாக்டர் கேட் ஸ்புரோஜிஸ் பிபிசியிடம் தெரிவித்திருக்கிறார்.
"டால்ஃபின்கள் தங்களின் உணவை தாங்களே தயார் செய்யும் திறன் கொண்டுள்ளன" என்று அவர் கூறியுள்ளார்.
இந்த உத்தி ஆஸ்திரேலியாவை சுற்றியுள்ள பகுதிகளில் வாழ முனைகின்ற டால்ஃபின்கள் இரையை பிடிக்கும் வழிமுறைகளில் ஒன்று என்று இந்த ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

பட மூலாதாரம், Kate Sprogis/Murdoch University
"டால்ஃபின்கள் முதலில் ஆக்டோபஸின் தலையை கடிக்கின்றன. பின்னர் அதன் உடலை அசைத்து, காற்றில் மேலே தூக்கி போட்டு மீண்டும் பிடித்து உண்பதற்கு தயார் செய்கின்றன" என்று ஸ்புரோஜிஸ் கூறியிருக்கிறார்.
"ஆக்டோபஸ் பெரிதாக இருப்பதால் அவற்றை டால்ஃபின்களால் ஒரேயடியாக சாப்பிட முடியாது. எனவே அதற்கு தயார் செய்ய வேண்டியுள்ளது"
டால்ஃபின்கள் இவ்வாறு அசைத்து மேலே தூக்கிப்போட்டு தயார் செய்வதால், ஆக்டோபஸின் கொடுக்குகள் டான்ஃபின்களை காயப்படுத்தாமல் தடுக்கப்படுகிறதாம்.
இந்த ஆய்வில், முர்டோச் மற்றும் மோனாஷ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஈடுபட்டனர்.
இதுவும் சுவாரஸ்யமாக இருக்கலாம்:
குவியல் குவியலாய் ஜெல்லி மீன்கள்
அவற்றுக்கு மூளையோ இதயமோ இல்லை; ஆனால் அவற்றைப் பார்க்க நேர்ந்தாலே நம்மில் பலருக்கு கடலில் கால்வைக்கவே பயம் ஏற்படும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்













