கருத்து மோதலில் தொடங்கிய டிரம்ப் -மெர்கெல் முதல் சந்திப்பு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜெர்மன் சான்சிலர் ஏங்கால மெர்கல் இடையே முதல் முறையாக நடந்த சந்திப்பு சற்று சங்கடமான சூழலில் அதிக முரண்பாடுகளை கொண்டதாக அமைந்தது.

பட மூலாதாரம், Getty Images
வாஷிங்டனில் இருவரும் இணைந்து பங்குபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வர்த்தகம், ரஷியா மற்றும் குடியேற்றம் தொடர்பாக முற்றிலும் வேறுபட்ட கருத்துக்களை தெரிவித்தனார்.
உலகமயமாக்கலின் பயன்கள், அகதிகளை அனுமதிப்பது மற்றும் உக்ரைன் பிரச்சனையில் ஒரு பாதுகாப்பான தீர்வை பேச்சுவார்த்தை மூலம் எட்ட வேண்டிய தேவை போன்ற கருத்துகளை மெர்கெல் முன்னிலைப்படுத்தினார்.
டிரம்ப்போ அமெரிக்காவிற்கு சாதகமான வர்த்தக ஒப்பந்தங்கள், குடியேற்றத்தை கட்டுப்படுத்துவது மற்றும் பிற நேட்டோ நாடுகள் பாதுகாப்பிற்காக அதிக பணம் செலுத்துவது பற்றி பேசினார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்













