டிரம்பின் புதிய பயணத்தடை திட்டத்துக்கும் தடை
இன்று (வியாழக்கிழமை) நள்ளிரவு துவங்குவதாக இருந்த அமெரிக்க அதிபர் டிரம்பின் புதிய பயணத் தடை திட்டத்தை, அது துவங்குப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு ஹவாய் மாநிலத்தை சேர்ந்த ஒரு நீதிபதி தடுத்து நிறுத்தியுள்ளார்.

பட மூலாதாரம், AFP
தேசிய பாதுகாப்பு தொடர்பான விஷயம் இந்த பயணத்தடை என்று அரசு தெரிவித்த ஆதாரங்கள் கேள்விக்குரியவையாக இருப்பதாக அமெரிக்க மாவட்ட நீதிபதியான டெரிக் வாட்சன் தனது தீர்ப்பில் சுட்டிக் காட்டியுள்ளார்.
நீதிபதியின் இந்த தீர்ப்பை குறித்து கருத்து தெரிவித்த அதிபர் டிரம்ப், இது முன்னெப்போதும் இல்லாதளவு ஒரு மிகுதியான நீதித்துறையின் தலையீடு என்று கூறியுள்ளார்.

பட மூலாதாரம், Reuters
முன்னதாக, டிரம்ப் விதித்த இந்த பயணத்தடை, 6 பெரும்பான்மை முஸ்லிம் நாடுகளை சேர்ந்த மக்களுக்கு 90 நாட்களுக்கும், அகதிகளுக்கு 120 நாட்களுக்கும் அமெரிக்காவில் நுழைவதற்கு தடை விதித்திருந்தது.
பயங்கரவாதிகள் அமெரிக்காவில் நுழைவதற்கு தடுக்கும் விதமாக இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக அதிபர் டிரம்ப் வலியுறுத்தி இருந்த வேளையில், விமர்சகர்கள் இது பாரபட்சமானது என்று தெரிவித்திருந்தனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












