நான்கு புதிய ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தியது வடகொரியா
வட கொரியா, கண்டம் விட்டு கண்டம் பாயும் நான்கு ஏவுகணைகளை ஜப்பான் கடலில் செலுத்தியதாக அதன் அண்டை நாடுகள் தெரிவித்துள்ளன.

பட மூலாதாரம், AP
முன்று ஏவுகணைகள் டோக்கியோவின் பிரத்யேக பொருளாதார மண்டலத்தில் தரை இறங்கியது என ஜப்பானிய பிரதமர் ஷின்சு அபே தெரிவித்துள்ளார்.
மேலும், இது வட கொரியாவின் புதிய அச்சுறுத்தலுக்கான தெளிவான செய்முறை என அபே தெரிவித்துள்ளார்.
சீனாவுடனான வடக்கு எல்லையில் உள்ள தளத்திலிருந்து ஏவுகணைகள் செலுத்தப்பட்டன என்றும் அவை பல ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவிற்கு பயணம் செய்தன என்றும் தென் கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.
தென் கொரியாவின் பொறுப்பு அதிபர் வாங்யோ வான், இது தொடர்பாக தேசிய பாதுகாப்பு கூட்டத்தை கூட்டியுள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












