மொசூல் பல்கலைக்கழகத்தை இராக் அரசு மீண்டும் கைப்பற்றியது
மொசூல் நகரத்தில் இருந்து இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் குழுவினரை ஒழித்துவிடும் போர் நடவடிக்கையில், மொசூல் பல்கலைக்கழகம் முழுவதையும் அரச படைகள் தங்களுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதாக இராக் அரசு தொலைக்காட்சி அறிவித்திருக்கிறது.

பட மூலாதாரம், Reuters
மொசூல் தங்களுடைய முக்கிய தளங்களில் ஒன்றாக இந்த பல்கலைக்கழகத்தை ஐ.எஸ். பயன்படுத்தி வந்த நிலையில், இதனை கைப்பற்றுவதற்கான சண்டை ஒரு நாளுக்கு முன்னர் தொடங்கியது.
காணொளி: மொசூல் நகரிலிருந்து வெளியேறியவர்களின் அவல நிலை
ஆயுதங்களை உருவாக்குவதற்கான ரசாயனங்கள் இந்த பல்கலைக்கழக வளாகத்தில் கண்டறியப்பட்டதாக இராக் ராணுவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பட மூலாதாரம், Reuters
இந்த பல்கலைக்கழகத்தை மீண்டும் கைப்பற்றியிருப்பது அரசு படைப்பரிவுகளுக்கு கிடைத்திருக்கும் குறிப்பிடத்தக்க கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இன்னொரு முக்கிய வெற்றியாகும்.
காணொளி: மொசூல் மக்கள் மனிதக்கேடயங்களா?
டைகிரிஸ் நதியால் பிளவுப்பட்டுள்ள மோசூலின் கிழக்கு பகுதி முழுவதையும் தங்களுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு நெருங்கி வந்திருப்பதாக ராணுவம் கூறியுள்ளது. ஐஎஸ் இன்னும் இதன் மேற்குப் பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.
மேலும் பார்க்க:
காணொளி: மோசமடைகிறது மொசூல் சண்டை-பரவும் மனிதப் பேரவலம்
காணொளி: மூன்றாவது நாளாக தாக்குதலுக்கு உள்ளாகும் மொசூல்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்
















