டைகிரிஸ் நதிக்கரை வரை இராக் தீவிரவாத தடுப்புப்படை முன்னேற்றம்
மோசூல் நகரில் இஸ்லாமிய அரசு குழுவினருக்கு எதிரான தாக்குதலை தொடங்கி 3 மாதங்களுக்கு பிறகு, அந்த நகரத்தை பிரிக்கின்ற டைகிரிஸ் நதியின் கரையை இராக் சிறப்பு படைப்பிரிவுகள் சென்றடைந்திருக்கின்றன.

பட மூலாதாரம், Amaq
சமீபத்திய நாட்களில் இரண்டு மாவட்டங்களை இராக்கின் தீவிரவாதத் தடுப்பு படைப்பிரிவுகள் மீண்டும் கைப்பற்றியிருப்பது முக்கிய முன்னேற்றமாகப் பார்க்கப்படுகிறது.
எண்ணிக்கையில் குறைந்து வருகின்ற இஸ்லாமிய அரசு படைப்பரிவுகளின் உறுப்பினர்களுக்கு எதிராக இராக் படை மேற்கொண்ட போர் தந்திர மாற்றங்கள், போர்க் களத்தில் வெற்றியையும், மூன்று முன்னரங்கு நிலைகளில் இராக் முன்னேற்றம் அடையவும் உதவியதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
டைகிரிஸ் நதியின் குறுக்கேயுள்ள 5 பாலங்களில் ஒன்றை சனிக்கிழமையன்று ஜிகாதிகள் உடைத்திருப்பதை, விரக்தியின் விளைவாக நடத்தப்பட்டதாக இராக் அதிகாரிகள் கூறியிருக்கின்றனர்.
ஆனால், மொசூல் நகரின் பெரும்பகுதி இன்னும் இஸ்லாமிய அரசு தீவிரவாத குழுவின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது.








