தென் சீனக்கடல் விவகாரத்தில் சீனாவுடன் பேரம் , சமரசம் இல்லை - அதிபர் ரொட்ரிகோ டுடெர்டோ
பெய்ஜிங்கிற்கு அடுத்த வாரம் பிலிப்பைன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுடெர்டோ அரசுப்பயணம் மேற்கொள்ள நிலையில், தென் சீனக்கடல் மீதான நாட்டின் நலனில் பேரம் பேசப்போவதில்லை என்றும், சமரசம் செய்யப்போவதில்லை என்றும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
கடந்த ஜூலை மாதம், தென் சீனக்கடலின் பெரும்பான்மையான வளங்களுக்கு சீனா உரிமை கோரி இருந்ததை சர்வதேச தீர்ப்பாயம் ஒரு தீர்ப்பின் மூலம் அதனை தள்ளுபடி செய்தது குறித்து விவாதிக்கப்படும் என்றும், ஆனால் அது குறித்து கடினமான அழுத்தங்கள் இருக்காது என்றும் டுடெர்டோ தெரிவித்துள்ளார்.
பெய்ஜிங் உடன் நெருக்கமான உறவை வைத்து கொள்ள அதிபரின் விரைவான நகர்வுகள் மணிலா உடனான கடல்வழி இறையாண்மையை பாதிக்கும் என்று பிலிப்பைன்ஸில் கவலைகள் எழுந்துள்ளன.








