தவறான தகவல் காரணமாக ஏமனில் அஞ்சலி கூட்டத்தில் குண்டு வீசப்பட்டது: விசாரணை குழு
ஏமனில் நடைபெற்ற அஞ்சலி கூட்டத்தில், செளதி தலைமையிலான கூட்டுப்படையை சேர்ந்த விமானம் தவறான தகவல் அடிப்படையில் தாக்குதல் நடத்தியுள்ளதாக குண்டுவீச்சு தொடர்பான விசாரணை ஒன்று தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
கடந்த சனிக்கிழமையன்று, ஏமன் தலைநகர் சனாவில் நடைபெற்ற அஞ்சலி கூட்டத்தில் வெடிகுண்டு வீசப்பட்டது. இதில், குறைந்தது 140 பேர் கொல்லப்பட்டார்கள் மற்றும் 500க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.
இந்த தாக்குதல் தொடர்பான விசாரணையை நடந்திய செளதி தலைமையிலான குழு, ஏமன் ராணுவத்தால் தவறான தகவல் வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல் செளதி தலைமையிலான கூட்டணியிடமிருந்து இறுதி ஒப்புதல் பெறப்படாமலே நடத்தப்பட்டுள்ளதாக விசாரணை குழு தெரிவித்துள்ளது.








