தொலைக்காட்சி தொடருக்கான எம்மி விருது: கேம் ஆஃப் த்ரோன்ஸ் சாதனை
லாஸ் ஏஞ்சலஸில் நடைபெற்ற டிவி தொடர்களுக்கான மதிப்பிற்குரிய எம்மி விருது நிகழ்ச்சியில், புகழ்பெற்ற தொலைக்காட்சி தொடரான கேம் ஃஆப் த்ரோன்ஸ், அதிக விருதுகளை வாங்கிக் குவித்து சாதனைப் படைத்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
எழுத்து மற்றும் இயக்கம் ஆகிய துறை உட்பட 12 விருதுகளை கேம் ஆஃப் த்ரோன்ஸ், தொடர் வென்றுள்ளது.
இதன் மூலம் இத்தொடர் மொத்தம் 38 எம்மி விருதுகளுடன், 37 விருதுகளை பெற்று முன்னனியில் இருந்த பிராசியர் தொடரின் சாதனையை முறியடித்துள்ளது.
அரசியல் நகைச்சுவை தொடரான "வீப்" அதிக விருதுகள் பெற்ற மற்றோரு தொடராகும். அத்தொடரில் அமெரிக்க துணை அதிபர் கதாப்பாத்திரத்தில் நடித்த ஜூலியா லூயிஸ் ட்ரேஃபஸ், சிறந்த நகைச்சுவை நடிகைக்கான விருதை வென்றுள்ளார். தொடர்ச்சியாக ஐந்தாவது முறையாக அவர் இந்த விருதை வென்றுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
இந்த விருதை பெற்றுக் கொண்ட லூயிஸ், தங்களின் நிகழ்ச்சி முதலில் ஒரு அரசியல் நையாண்டி நிகழ்ச்சியாகதான் தொடங்கியது என்றும் ஆனால் தற்போது ஒரு நிலையான ஆவணப்படம் போல் அதை உணர்வதாக தெரிவித்தார்.
மேலும் இந்த விருதை வெள்ளிக்கிழமையன்று உயிரிழந்த தனது தந்தைக்கு அவர் அர்பணித்துள்ளார்.
சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது, "டிராஸ்பரண்ட்" என்னும் தொடரில் திருநங்கையாக நடித்த ஜெஃப்ரெ டம்பருக்கு கிடைத்தது. இரண்டாவது முறையாக அவர் இந்த விருதைப் பெற்றுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
இந்த விருதைப் பெற்றுக் கொண்டு பேசிய டம்பர், தொலைக்காட்சித் துறை இம்மாதிரியான கதாப்பாத்திரங்களை மாற்று பாலினத்தவர்களுக்கு வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.
திருநங்கையாக நடிக்கும் கடைசி ஆண் தான் என்றால் தான் மகிழ்ச்சியாக உணரப்போவதாக அவர் தெரிவித்தார். தங்களுக்கு பிற வேலைகள் இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
"ரோபோட்" தொடரில் நடித்தற்கான சிறந்த நடிகர் விருதை ரமி மலெக் பெற்றார். 1998 ஆண்டிலிருந்து சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர் எம்மி விருதைப் பெறுவது இதுவே முதல் முறையாகும்.
"ஆர்ஃபன் பிளாக்" என்னும் தொடரின் நாயகியான டாட்டியானா மஸ்லானி சிறந்த நடிகைக்கான விருது பெற்றார்.

பட மூலாதாரம், Getty/AP
முன்னாள் கால்பாந்து ஆட்டக்காரின் இரட்டை கொலை தொடர்பான உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட குற்றவியல் தொடர் "தி பீப்பள் வெர்சஸ் ஒஜெ சிம்ப்சன்" ஒன்பது விருதுகளை பெற்றது.












